விலை மலிவாக இருந்தாலும்… இது தரும் பலன்கள் என்னமோ ஏராளம் தான்!!!

Author: Udayaraman
8 October 2020, 10:39 pm
Quick Share

பழங்கள் என்றாலே அது ஆரோக்கியமானது தான். அதில் எளிதாக கிடைக்கக்கூடிய கொய்யாப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் உடல் எடையை பராமரிப்பதிலும் கொய்யாப்பழம் பெரும்பங்கு வகிக்கிறது. 

புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொய்யாப்பழத்திற்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரழிவு நோய்க்கு எதிராக போராடும் ஆற்றலும் இந்த பழத்தில் உள்ளது. நமது உடலுக்கு மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று இதயம். இத்தகைய இதயத்தின் ஆரோக்கியத்தை கொய்யாப்பழம் பாதுகாக்கிறது. 

மலச்சிக்கல் பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர விரைவில் குணமாகும். பார்வையில் குறைபாடு உள்ளவர்களும் இப்பழத்தை அடிக்கடி எடுத்து வந்தால் பார்வையில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். கர்ப்பிணி பெண்களுக்கும் கொய்யாப்பழம் உகந்தது. 

பல் வலியின் கொடுமை  என்பது அதனை அனுபவித்தவர்களுக்கே மட்டுமே தெரியும். இத்தகைய வலியை போக்கும் தன்மையும் இப்பழத்திற்கு உண்டு. கொய்யாப்பழம் மட்டும் அல்லாமல் கொய்யா இலைகளும் பல் வலிக்கு நல்ல ஒரு மருந்தாக அமைகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவிய நாளில் இருந்தே பலர் மன அழுத்தத்தில் இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. இந்த மன நோயை போக்கும் ஆற்றலும் கொய்யாவிற்கு உள்ளது. 

வைட்டமின் C குறைப்பாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோய்க்கு கொய்யாப்பழம் மாமருந்தாக விளங்குகிறது. வயிற்று போக்கு ஏற்படும் சமயத்தில் கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் விரைவில் வயிற்று போக்கு நின்று விடும். தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எந்த வித மருந்தும் இல்லாமலே தைராய்டு விரைவில் குணமாகும். 

சளி, இருமல் போன்றவற்றில் இருந்து தீர்வு பெற இப்பழத்தை சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் அழகை பராமரிப்பதிலும் கொய்யாப்பழம் சிறந்து விளங்குகிறது. இப்பழத்தில் உள்ள வைட்டமின் C, லைக்கோபீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சரும அழகை பேண உதவுகிறது. மேலும் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்களும் இப்பழத்தை தொடர்ந்து எடுத்து வர சீக்கிரமே நல்ல செய்தி கிடைக்கும்.

Views: - 55

0

0