PCOS என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது பெண்களின் ஹார்மோன்களை பாதிக்கும் ஒரு பொதுவான மருத்துவ நிலையாகும். இதன் காரணமாக சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் மோசமான சூழ்நிலைகளில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இது பற்றி தெரியாதவர்களுக்கு PCOS என்பது அடிப்படையில் ஒரு ஹார்மோன் சமநிலையின்மை. இந்த நிலையின் போது பெண்களின் அண்டகங்கள் அளவுக்கு அதிகமான ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும்.
தற்போது பல பெண்கள் PCOS காரணமாக குழந்தையின்மை பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர். இது அவர்களுடைய மனநிலையை மோசமாக பாதிக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் இன்னும் மோசமாகிறது. பிPCOS பிரச்சனையை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாகவே நம்மால் கட்டுப்படுத்த முடியும். எனவே இந்த பதிவில் PCOS அறிகுறிகளை எளிதில் சமாளிக்க உதவும் சில உடற்பயிற்சிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
யோகா
யோகா என்பது சுவாச கட்டுப்பாடு மற்றும் தியானம் ஆகியவற்றுடன் இணைந்த பல விதமான தோரணைகள் அடங்கிய உடற்பயிற்சியின் சிறந்த வடிவமாக கருதப்படுகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து, PCOS காரணமாக ஏற்படும் அறிகுறிகளை தணிக்கிறது. குறிப்பிட்ட சில யோகாசனங்கள் செய்வது மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, உடலின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது. மேலும் மனதிற்கு ஓய்வு கிடைக்கிறது.
அதிக தீவிரம் கொண்ட பயிற்சி (HIIT)
HIIT என்று சொல்லப்படும் ஹை இன்டென்சிட்டி இன்டர்வெல் டிரெய்னிங் என்பது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி ஆகும். இது ஒருவருடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மேலும் பிற வகையான உடற்பயிற்சிகளோடு ஒப்பிடும்போது இது கொழுப்பை விரைவாக குறைப்பதற்கு உதவுகிறது.
கார்டியோ வொர்க்-அவுட்டுகள்
விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற கார்டியோ பயிற்சிகள் உங்களுடைய இதயத்துடிப்பை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் உடல் எடையை சீராக பராமரித்து, இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்தும்.
இதையும் படிக்கலாமே: மயோனைஸ் ரொம்ப பிடிக்குமா… உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்!!!
நடைபயிற்சி
இது எளிமையான ஒன்றாக இருந்தாலும் இதன் மூலமாக நமக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். இந்த குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சியை உங்களுடைய அன்றாட வாழ்வில் மிக எளிதாக சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமான முறையில் விறுவிறுப்பான நடை பயிற்சியில் ஈடுபடுவது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தி, உடல் எடையை சரியாக பராமரிப்பதற்கு உதவும். மேலும் PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இன்சுலின் உணர்த்தினரை அதிகரிக்கும்.
பைலேட்ஸ்
இந்த வகையான உடற்பயிற்சி உங்களுடைய வலிமை, நெகிழ்வு தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மேலும் இது உங்களுடைய தோரணை மற்றும் ஒட்டுமொத்த உடல் அமைப்பை மேம்படுத்துகிறது. உடல் எடையை கட்டுப்படுத்தவும், உடலின் விழிப்புணர்வு திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.