உணவு மூலமாகவே ஆஸ்துமாவை குணப்படுத்தலாம் வாங்க!!!

Author: Hemalatha Ramkumar
25 May 2023, 7:24 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

நுரையீரலின் சுவாச பாதை சுருங்கி அப்பகுதியில் சளிப்படலம் தோன்றுவதால் ஆக்கிரமித்துக் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நோயை இரைப்பு நோய் அல்லது ஆஸ்துமா என கூறுகிறோம்.

இருமல்… நெஞ்சை அமுக்குவது போன்ற உணவு, உடல் சோர்வு மூச்சுத் திணறல் மூச்சு விடுவதில் அதிக சிரமம் போன்றவை ஆஸ்துமா கொடுக்கக்கூடிய தொல்லைகள் ஆகும். ஆஸ்துமாவை எளிதாக கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் கூடிய எளிய முறைகளை இங்கு பார்ப்போம்.

குழந்தை பிறந்ததும் புட்டிப்பால் கொடுக்காமல் குறைந்தது ஒன்றரை வருடங்களாவது தாய்ப்பால் வழங்கினால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் நண்டு குழம்பு, மிளகுக் குழம்பு, நாட்டுக் கோழி குழம்பு போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சுரைக்காய், வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

துளசி இலை, நொச்சி இலை, கற்பூரவல்லி இலை ஆகிய மூன்றையும் சமமாக சேர்த்து சூடான தண்ணீரில் போட்டு அதன் அந்த ஆவியை நுகர்வதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் நுரையீரலில் மூச்சு குழல் பாதை விரிவடைந்து மூச்சுக்காற்று எளிதாக செல்ல வழிவகுக்கிறது.

சிறிதளவு இஞ்சி, 2 பூண்டு பற்கள், 2 கிராம்பு ஆகியவற்றை நசுக்கி 250 மில்லி நீருடன் சேர்த்து இந்த நீர் 100 மில்லியாக குறையும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து காலை மாலை இரண்டு வேளையும் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வருவதால் நுரையீரல் பகுதியில் தேங்கியிருக்கும் நாள்பட்ட சளி முற்றிலும் வெளியேறிவிடும்.

டீ குடிக்கும் போது அதனுடன் சுக்கு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைக் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும்போது ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

இலவங்கப்பட்டை பொடி அதிக அளவில் ஆனு்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்தது. அழற்சி முதலாக தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன் கால் ஸ்பூன் திரிகடுகப் பொடி (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை) 200 மில்லி அளவு நீரில் இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 61

0

0

Leave a Reply