COVID-19 : நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு குறிப்புகள் | முன்னெச்சரிக்கை இருந்தால் பயம் வேண்டாம்

17 May 2021, 1:13 pm
fight against corona in a natural way
Quick Share

நாடெங்கும் இந்த கொரோனா தொற்றால் பலரும் பலியாகி வருகின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் பலரும் மருத்துவமனைகளில் அல்லல் பட்டு அலைமோதிக்கொண்டு இருக்கின்றனர். உங்களுக்கோ உங்கள் உறவினருக்கோ கொரோனா தொற்று இருந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தனித்திருந்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும். ஆரோக்கியமாக இருந்து கொரோனாவை  விரட்டிவிடலாம்.

கொரோனா சமயத்தில் ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான சிரமங்கள் குணமாக, 

ஒரு கைப்பிடி துளசி மற்றும் தூதுவளை, ஒரு வெற்றிலையோடு சிறிது சுக்கு, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள், திப்பிலி இருந்தால் அரை தேக்கரண்டி ஆகியவற்றை எடுத்து 250 மிலி தண்ணீரில் கொதிக்க  வைத்து இறக்கவும். 

இந்த தண்ணீரை பெரியவர்களுக்கு ஒரு 100 மிலி அளவும் சிறியவர்களுக்கு 50 மிலி அளவும், 8 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஒரு 10 மிலி அளவும் கொடுத்து வர நுரையீரலில் சளி தங்காமல் வெளியேறிவிடும். நுரையீரலும் பலமாகும்.

ORAC அதிகரிக்கும் உணவுகள்

ORAC என்றால் Oxygen Radical  Absorbance Capacity என்பதாகும். நம் உடலில்  15 வயது வரை உள்ளவர்களுக்கு இயற்கையாகவே உடலில் தேவையான அளவு ORAC இருக்கும். அதன் பிறகு வெளியிருந்துதான் உடலுக்கு நாம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 3000 முதல் 5000 வரையிலான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். திராட்சை, நாட்டு மாதுளம் பழம் போன்ற பழ வகைகளையும் நல்ல கேரட், பீட்ரூட், போன்ற சத்தான காய்கறிகளையும் கீரைகளையும் தினமும் சாப்பிடலாம். அதோடு பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் தினமும் 4 அல்லது 5 சாப்பிட்டால் உடலின் ORAC அளவு அதிகரிக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க,

நாட்டு மாதுளை ஜூஸ், ஆரஞ்சு, திராட்சை ஜூஸ் குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை சேர்த்துக்கொண்டால் சளி ஏற்படும் என்றால் அதை தவிர்த்துக்கொள்ளுங்கள். சீதா, நெல்லிக்காய் போன்றவற்றையும் அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி சம அளவில் எடுத்துக்கொண்டு தண்ணீரில்  போட்டு நன்கு கொதிக்க வைத்து சுண்டவிட்டு குடித்தாலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

Views: - 355

1

0