தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்|எப்போது அவசர உதவியை நாட வேண்டும்???

24 March 2020, 6:17 pm
Quick Share

தீக்காயம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு அனைவரிடத்திலும் இருத்தல் அவசியம். தீக்காயங்கள் நான்கு வகைப்படும். அனைத்து வகைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை செய்ய முடியாது. எனவே தீக்காயங்களின் வகைகளையும் அவை ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

வீட்டில் பொதுவாக அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படுவது தீக்காயம். தீக்காயம் என்பது எரிச்சலை தருவதோடு அந்த இடத்தில் உள்ள செல்களை இறக்க செய்து தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது எதனால் ஏற்பட்டது மற்றும் எந்த அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பதை கொண்டு நாம் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு சில காயங்கள் தீவிரமாகாமல் இருக்கவும்  உயிர் இழப்பை தடுக்கவும் அவசர உதவி பெறுவது அவசியம். 

காயங்களின் வகைகள்:

1. முதல் டிகிரி தீக்காயங்கள்:

இதனை சூப்பர்ஃபீஷியல் காயங்கள் என்றும் சொல்வர். இந்த காயத்தில் ஒரளவு வீக்கம் மற்றும் அந்த இடமே சிவப்பாக காணப்படும். இந்த வகை தீக்காயத்தில் கொப்புளங்கள் இருக்காது. 

2. இரண்டாவது டிகிரி தீக்காயங்கள்:

இது போன்ற தீக்காயத்தில் தோல் தடிசாக காணப்படும். இதில் கொப்புளங்கள் ஏற்படும். தோலின் அடுக்குகளில் பாதிப்புகள் உண்டாகும். 

3. மூன்றாம் டிகிரி தீக்காயங்கள்:

இந்த வகை தீக்காயம் ஏற்பட்டால் நரம்பு மற்றும் டெர்மிஸ் பாதிப்பால் அந்த இடமே மறத்து போய் காணப்படும்.

4. நான்காம் டிகிரி தீக்காயங்கள்:

இது தோலின் உள்ளே ஊடுருவி தசைகளை பாதித்து சீர்படுத்த முடியாத காயங்களை ஏற்படுத்தும்.

வீட்டில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்???

பெரும்பாலான தீக்காயங்களுக்கு அவசர உதவியை பெருவதே நல்லது. சிறிய காயமாக இருந்தால் அதிலிருந்து விடுபட கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

★ஒரு ஆன்டிபாக்டீரியல் சோப்பை எடுத்து கைகளை நன்றாக கழுவுங்கள்.

★வலி  மற்றும் வீக்கத்தை குறைக்க தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் சில்லென்று இருக்கும் தண்ணீரை ஓட விடுங்கள்.

★தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு காயத்தை கழுவுங்கள்.

★தோல் பிளந்து போகாமல் இருந்தால் ஆன்டிபயாடிக் ஆயின்மென்டை தடவுங்கள்.

★ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட பேன்டேஜை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் லூசாக சுற்றிக் கொள்ளுங்கள்.

எப்போது அவசர உதவியை பெற வேண்டும்???

இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட டிகிரி தீக்காயம் ஏற்படுமாயின் கண்டிப்பாக அவசர உதவியை நீங்கள் பெற வேண்டும்.

Leave a Reply