நினைத்தது உடனடியாக நடக்க நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்!!!

Author: Poorni
9 March 2021, 10:24 am
Quick Share

நீங்கள் பேசும் சொற்களை எப்போதுமே கவனியுங்கள்.  நேர்மறையான எண்ணங்களை பற்றி மட்டுமே யோசிக்கவும் என்று மக்கள் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம், அனைத்தும் ஒரே மாதிரியான விஷயங்களை தான்  ஈர்க்கின்றன. எனவே நீங்கள் நேர்மறையாக நினைத்தால் மட்டுமே, நீங்கள் நல்ல மற்றும் நேர்மறையான விஷயங்களை ஈர்ப்பீர்கள்.

உங்கள் கனவுகளை அடைவதற்கும், உங்கள் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கும், ​​இந்த ஈர்ப்பு விதியை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.  சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் கொடுப்பதை தான் நீங்கள் எப்போதும் ஈர்க்கிறீர்கள். இது பல அதிசயங்களைச் செய்யலாம். எனவே உங்கள் நலனுக்காக இந்த ஈர்ப்பு விதியைப்  பயன்படுத்த 5 வழிகள் இங்கே உள்ளது. 

★உங்கள் மனநிலையை மாற்றவும்:

உங்களிடம் சில விஷயங்கள் இல்லை என்ற உண்மையைத் தொடர்ந்து வெளியிட வேண்டாம். ஏனெனில் இது அதிக பற்றாக்குறையை ஈர்க்கும். ஆகவே, உங்களுக்கு பிடித்தமான அந்த வகையான வாழ்க்கையை ஈர்க்க, ஏற்கனவே உங்கள் கனவு வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்து கொள்ளுங்கள்.

★காட்சிப்படுத்தவும்: 

நீங்கள் விரும்பும் வாழ்க்கையை ஈர்க்க, அதைக் காட்சிப்படுத்தி பார்க்க முயற்சி செய்யுங்கள். இந்த யோசனையை யதார்த்தமாக மாற்றுவதற்காக, உங்கள் நினைவில் உள்ள அந்த வாழ்க்கையை கற்பனை செய்து பாருங்கள் அல்லது இன்னும் சிறப்பான  ஒன்றை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

★ஒத்து போவது:

இதன் பொருள் நீங்கள் அடிக்கடி அனுபவிக்கும் தற்செயலான விஷயங்களை தேடுவது. ஏதோ ஒரு விஷயத்தில்  உங்களால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை என்றால், எதார்த்தமாக நடக்கும் விஷயங்களில் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து  நம்பிக்கையுடன் இருங்கள். 

★நன்றியுணர்வைப் பயிற்சி செய்யுங்கள்:

உங்களிடம் இல்லாதவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்களிடம் உள்ளவற்றில் கவனம் செலுத்துங்கள். கடவுள் உங்களுக்கு ஆசீர்வதித்த அனைத்தையும் ஒரு டைரியில் எழுதி பராமரிக்கவும். அதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். 

★நீங்கள் நினைப்பதை சத்தமாக வெளியே கூறவும்: 

நீங்கள் எதையாவது ஈர்க்க விரும்பினால், அதைச் செய்வதற்கான எளிதான வழி அதனை சத்தமாகச் சொல்வதே ஆகும். நீங்கள் விரும்புவதை சத்தமாகவும் தெளிவாகவும் சொல்லுங்கள். பிரபஞ்சத்தில் அதை வெளியே வையுங்கள். இது கண்டிப்பாக வேலை செய்யும்.

Views: - 156

0

0