தலைவலி என்பது பலரைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் ஒரு பொதுவான உடல்நலக் கவலையாகும். நிகழ்வதைத் தவிர்ப்பதற்கு முற்றிலும் வழி இல்லை. ஏனெனில் நீங்கள் முக்கியமானதாகக் கூட கருதாத எந்தவொரு சிறிய நிகழ்வாலும் இது தூண்டப்படலாம். தூக்கமில்லாத இரவுகள், காலை உணவைத் தவிர்ப்பது, வேலை அழுத்தம் அல்லது மன அழுத்தம் நிறைந்த நாட்கள், இவை அனைத்தும் தலைவலியை உண்டாக்கி உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடியவை.
பொதுவாக, நாம் அத்தகைய சூழ்நிலையில் ஏதேனும் மருந்தை சாப்பிட முயற்சி செய்வோம். இருப்பினும் இதை அடிக்கடி செய்வது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில், அதிக வலிநிவாரணிகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இருப்பினும் உங்கள் மோசமான தலைவலியிலிருந்து விடுபட மற்றொரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழி தலைவலி நிவாரண உணவுகளை உட்கொள்வது. ஆம், சில உணவுகள் மோசமான தலைவலியிலிருந்து நிவாரணம் அளிப்பதாக அறியப்படுகிறது. உங்கள் வழக்கமான வலி நிவாரணி மருந்துக்குப் பதிலாக அடுத்த முறை இவற்றை முயற்சிக்கவும்.
●இஞ்சி
இஞ்சி ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இது பல உடல்நல பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். அந்த வகையில் இது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். குமட்டல் மற்றும் காய்ச்சலைக் கையாளும் போது இஞ்சி பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற நேரத்தில் aநீங்கள் இஞ்சி டீ குடிக்கலாம் அல்லது உங்கள் உணவில் இஞ்சி சேர்க்கலாம்.
●தர்பூசணி
தலைவலிக்கு ஒரு முக்கிய காரணம் நீரிழப்பு. எனவே, தண்ணீர் குடிப்பது அல்லது நீர் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் நிலையைத் தணிக்க உதவும். தர்பூசணியில் 92 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. மேலும் இது உங்களை ரீஹைட்ரேட் செய்ய ஒரு நல்ல வழி. இது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இது தலைவலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
●கீரை
கீரை மற்றும் காலே போன்ற பச்சை இலை காய்கறிகளில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது. இது தலைவலியைக் குறைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற ஊட்டச்சத்து ஆகும். ஒரு கப் கீரையில் 24 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. இது மட்டுமின்றி, தொடர்ந்து மெக்னீசியம் உட்கொள்வதால் ஒற்றைத் தலைவலி தாக்குதலை 41.2 சதவீதம் குறைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
●தயிர்
கால்சியம் நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும். கால்சியம் குறைபாடு மூளையின் திறமையாக வேலை செய்யும் திறனைக் குறைக்கிறது. தயிரில் அதிக அளவு ரிபோஃப்ளேவின் உள்ளது. இது B வைட்டமினின் ஒரு பகுதியாகும். இது தலைவலிக்கு பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.