ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல தூங்க போகும் முன் இத சாப்பிடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
20 March 2023, 5:48 pm
Quick Share

நாம் உண்ணும் உணவிற்கும் நமது ஆரோக்கியம் மற்றும் தூக்கத்திற்கும் தொடர்பு இருப்பதை நாம் அறிவோம். அதே போல இரவு படுக்கைக்கு செல்லும் முன் நாம் சாப்பிடும் உணவு நமது தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நல்ல தூக்கத்தை பெற உதவும் சில உணவுகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

பாதாமில் அதிக அளவு மெலடோனின் உள்ளது. இது நமது தூக்கம்-விழிப்பு சுழற்சியை சீராக்க உதவுகிறது. பாதாம் சாப்பிடுவது தூக்கமின்மையை போக்க உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. தினமும் தூங்குவதற்கு முன் ஒரு சில பாதாம் பருப்புகளை உட்கொள்வது தூக்கமின்மையைக் குறைக்கிறது.

பலருக்கு தூங்குவதற்கு முன் பால் மற்றும் தேன்
குடிக்கும் பழக்கம் உண்டு.
பால் மற்றும் தேன் கலவையை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிப்பது சிறந்த தூக்கத்தை தரும் என்று ஒரு ஆய்வு மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

வெதுவெதுப்பான பால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக ஒரு கப் மூலிகை தேநீரை எடுத்துக்கொள்ளலாம். தேநீர் குடிப்பது குறைவான சோர்வையும் சிறந்த தூக்க தரத்தையும் தருவதாக ஆய்வு காட்டுகிறது.
ஆனால் நீங்கள் பருகும் தேநீரில் காஃபின் குறைவாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

குறைந்த நார்ச்சத்து உணவு, நிறைய நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகளை உட்கொள்பவர்களின் தூக்கத்தின் தரம் குறைந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது. இது இரவு நேரத்தில் விழித்தெழுவதற்கு காரணமாகிறது. மாறாக, அதிக அளவு நார்ச்சத்து சாப்பிடுவது மெதுவான தூக்கத்தில் செலவழிக்கும் நேரத்தை அதிகரிக்கிறது. இது மூளை பராமரிப்பு மற்றும் மீட்புக்கு உதவும் என்று கருதப்படுகிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் ஆப்பிள்கள், அவற்றின் தோல்கள், ராஸ்பெர்ரி, வாழைப்பழங்கள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கேரட், ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை அடங்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 215

0

0