மாதவிடாய் காலங்கள் மோசமான வலி மற்றும் வீங்கிய வயிற்றைக் கொண்டு வருகின்றன. ஆனால், ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மாதமும் இதை சமாளிக்க வேண்டி தான் உள்ளது. சில நல்ல உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இதனை எளிதில் சமாளிக்கலாம். மாதவிடாய் வலி அதிகரிக்காமல் இருக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்:
பால் பொருட்கள்:
பால் பொருட்களான பால், வெண்ணெய், ஐஸ்கிரீம் போன்றவற்றில் அராச்சிடோனிக் அமிலங்கள் உள்ளன. இவை மாதவிடாய் வலியைத் தூண்டக்கூடியவை.
எண்ணெயில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகள்:
உங்கள் மாதவிடாய் காலத்தில் சிப்ஸ், பிஸ்கட் மற்றும் பிற ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இந்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. அவை உங்கள் உடலின் ஈஸ்ட்ரோஜன் அளவை உயர்த்தி மனநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
சர்க்கரை உணவுகள்:
மாதவிடாய் வரும்போது பெரும்பாலான பெண்கள் கேக், இனிப்புகள் சாப்பிட விரும்புவார்கள். மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற, சர்க்கரைப் பொருட்கள் சாப்பிடுவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது நமது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இது நமது மனநிலை மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். மேலும், மாதவிடாய் காலத்தில் சர்க்கரை நம்மை சோர்வடையச் செய்கிறது.
காபி:
நீங்கள் காபிக்கு அடிமையானவராக இருந்தால், உங்கள் மாதவிடாய் காலத்தில் அதற்கு விடைகொடுக்க வேண்டும். காபி உடலின் இரத்த அழுத்த அளவு மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது உங்கள் மாதவிடாய் காலத்தில் உங்கள் நிலையை மோசமாக்குகிறது. உங்கள் மாதவிடாய் காலத்தில் காஃபின் உட்கொள்ளும் போது உங்களுக்கு பதற்றம் ஏற்படலாம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.