காலையில் தூங்கி எழுந்தவுடன் என்ன உணவுகளை சாப்பிடலாம், எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

25 March 2020, 4:51 pm
food updatenews360
Quick Share

காபி/டீ :

இரவு  நேரத்தில்   நீங்கள் அதிக  நேரம் உணவு உண்ணாமல்   இருந்தால் உங்களுக்கு நிம்மதியான   உறக்கம் வராது. அப்படி அசதியில் நீங்கள்   உறங்கி விட்டீர்கள் என்றாலும் காலையில் எழுந்தவுடனே  காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள். காரணம்   ஏற்கனவே வயிற்றில் அமிலம் சுரந்திருப்பதால், இரைப்பையில் அலர்ஜி   உண்டாகும். இதனால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும். காபி உடலுக்கு  நல்லது என்றாலும் ஏதாவது ஒரு உணவை உண்டபின்பே காபியை குடிக்க வேண்டும்.

வேறு என்ன உணவு உண்ணலாம்:

இளம் சூடான நீர்:

காபி,   டீக்கு பதிலாக, காலை   நேரங்களில் வெதுவெதுப்பான   தண்ணீர் குடிப்பதால், உடல்   எடை குறையும். உடலிலுள்ள கழிவுகள்   வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி   அதிகரிக்க செய்யும். புத்துணர்ச்சி கிடைத்து, சருமம்   இளமையாயாக மாறிவிடும். செரிமானம் எளிதில் நடந்து, மலசிக்கல்   பிரச்சனை தீர்ந்து விடும்.  

காரமான உணவு  மற்றும் புளிப்பான   பழங்கள்:

காலை   நேரங்களில் காரமான உணவு   மற்றும் புளிப்பான உணவுகளை   உண்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இவற்றை   உண்ண எடுத்துக் கொண்டால் இரைப்பையில் எரிச்சல் ஏற்பட்டு, உணவு   செரிமானம் அடையாமல் போய்விடும்.

வேறு என்ன உணவு உண்பது:

நட்ஸ் – பாதாம் ஆகிய   கொட்டைகளை இரவு உறங்கும்   முன்பு ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு   இதை காலையில் உண்ணலாம். இதனால் இரைப்பையின் ph  அளவு சீராக இருப்பது மட்டுமில்லாமல் நீரழிவு நோயையும்   கட்டுப்படுத்த உதவும். பெர்ரி பழங்கள்- ப்ளூபெர்ரி போன்ற பழங்களை  காலையில் உண்ண எடுத்துக்கொண்டால் நியாபக சக்தி அதிகரிப்பது மட்டுமில்லாமல், நோய்  எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். கிவி, ஆப்பிள், தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி  ஆகிய பழங்களில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், இவற்றை உண்பதற்கு எடுத்துக் கொள்ளலாம். இதனால   ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

 இனிப்பு:

காலை   நேரங்களில்   இனிப்பு உண்பதை   தவிர்ப்பது நல்லது.  இது உங்களின் இன்சுலின் அளவை அதிகரிக்க   செய்து நீரழிவு நோய் வர வழி வகுக்கும். 

வேறு என்ன  உண்ணலாம்:

காலையில்   வெறும் வயிற்றில்   வெதுவெதுப்பான நீரில்   தேனை கலந்து குடிப்பது   நல்லதாகும். தேனுடன் எலுமிச்சை   சாறை சேர்ந்து பருகினால் ரத்தம் சுத்தமாக   இருக்கும். அதுமட்டுமில்லாமல் ரத்த ஓட்டம் சீராக  இருக்கும். வயிற்று எரிச்சலை குறைத்து, செரிமானம் எளிதில் நடக்க   தேன் உதவி புரிகின்றது. தூக்கமின்மை பிரச்சனையை தளர்த்தி விடும்.  உடல் எடை குறைந்து விடும்.

Leave a Reply