இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் பண்ற ஐடியால இருக்கீங்களா… நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய சில விஷயங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
10 May 2023, 4:30 pm
Quick Share

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்பது ஒரு பிரபலமான டயட்டிங் முறையாகும். இது எடை இழப்பு மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்குவதற்கான நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த உணவு முறையில் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், நீங்கள் என்ன சாப்பிடலாம் என்பதற்கு விதிகள் எதுவும் இல்லை. இருப்பினும், விரதம் இருக்கும் நேரத்தில் உங்கள் உடலை ஆதரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் டயட்டிங் முறையின் போது சாப்பிட வேண்டிய சில சிறந்த உணவுகளை இப்போது பார்க்கலாம்.

வெண்ணெய் பழம், அதிக கலோரி கொண்ட பழமாக இருந்தாலும், அவற்றில் அதிக நிறைவுறா கொழுப்பு இருப்பதன் காரணமாக எடை இழப்புக்கு ஏற்றது. 2017 ஆம் ஆண்டின் ஆராய்ச்சியின் படி, இந்த பழம் உடலை முழுமையாக வைத்திருக்க உதவுகின்றன.

ப்ரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைக்கட்டிய பயிர்கள் மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் கடைப்பிடிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும். இந்த காய்கறிகளில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. கூடுதலாக, நார்ச்சத்து பசியின்மையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இந்த காய்கறிகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையின் போது உட்கொள்ள வேண்டிய சில சிறந்த உணவுகள். உங்கள் உணவுத் திட்டத்தில் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்ற குறைந்த கலோரி கார்போஹைட்ரேட்டுகளை சேர்த்துக்கொள்வது உங்களின் விரத நேரத்தில் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

கூடுதலாக, கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் பட்டாணி போன்ற உணவுகள் கலோரி கட்டுப்பாடு இல்லாமல் கூட உடல் எடையை குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. எனவே, இந்த உணவுகளை உங்கள் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் டயட்டில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள தேர்வாக இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 211

0

0