ஹீமோகுளோபின் குறைபாடு தான் உங்கள் பிரச்சினையா? இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

8 June 2021, 7:16 pm
foods to increase the hemoglobin level
Quick Share

உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால், குறைந்த ஹீமோகுளோபின் அளவு பிரச்சினையை புறக்கணிக்காமல் முக்கியமாக கவனிக்க வேண்டும். உங்கள் ஆற்றல் அளவை உயர்வாக வைத்திருப்பது முதல் இரத்த சோகை போன்ற நிலைகளை உங்களை விட்டு ஒதுக்கியே வைத்திருப்பதை வரை, ஹீமோகுளோபின் எனும் இரத்த சிவப்பணுக்களில் இருக்கும் இரும்புச்சத்து நிறைந்த புரதம் முக்கியத்துவம் வகிக்கிறது. உடலின் பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுவதில் ஹீமோகுளோபின் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால்தான், ஹீமோகுளோபின் முறையான வரம்பிற்குள் இருக்கவேண்டியது அவசியம் ஆகும். ஆண்களைப் பொறுத்தவரை, சாதாரண வரம்பு ஒரு டெசிலிட்டருக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரை இருக்க வேண்டும், பெண்களுக்கு இது ஒரு டெசிலிட்டருக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும். எனவே ஒரு ஹீமோகுளோபின் பரிசோதனையை மேற்கொண்ட பிறகு, முடிவுகள் திருப்தியற்றதாக இருந்தால், அதை நீங்கள் உடனடியாக சீர் செய்ய வேண்டும். விரும்பிய அளவுகளை அடைய எளிதில் கிடைக்கக்கூடிய பின்வரும் சமையலறை பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.

பீட்ரூட்

இரும்பு, தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன் நிறைந்துள்ள பீட்ரூட்கள் சிவப்பு ரத்த அணுக்களை சரிசெய்யவும் மீண்டும் செயல்படுத்தவும் உதவுகின்றன, இதனால் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கும். கேரட், ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றை விட பீட்ரூட் சாறு குறைந்த ஹீமோகுளோபின் அளவை எதிர்த்துப் போராட ஒரு சிறந்த தீர்வாகும்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதில் இரும்புச் சத்து மட்டும் அதிகமல்ல, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துடன் ஃபோலிக் அமிலம் போன்றவையும் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான இரத்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் பீட்ரூட் சாறு குடிப்பது சிறந்தது. 

பீட்ரூட் மற்றும் மாதுளை போன்றவற்றின் சாற்றை, காலை அல்லது ஒர்க்அவுட் பானமாக எடுத்துக்கொள்ளலாம். இவை இரும்புச் சத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை பளபளக்கும்.

பயறு மற்றும் பருப்பு வகைகள்

பயறு வகைகளில் குறிப்பிடத்தக்க அளவு புரதம், நார்ச்சத்து, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், ஃபோலேட் மற்றும் மாங்கனீசு போன்றவை உள்ளன. உடலில் அத்தியாவசிய இரும்புச்சத்துக்கு தினமும் ஒரு கப் பருப்பு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 

மாதுளை

வைட்டமின் சி, இரும்பு, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ள அஸ்கார்பிக் அமிலம் மாதுளையில் உள்ளது, இது இரத்த எண்ணிக்கையை சீராக்க உதவுகிறது. ஒருவரின் அன்றாட உணவில் இதனை சேர்க்கும்போது ஹீமோகுளோபின் அளவு உயரும்.

முளைக்கட்டிய பயிர்கள்

ஃபோலிக் அமிலக் குறைபாடு குறைந்த ஹீமோகுளோபின் அளவிற்கு வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது. பச்சை இலை காய்கறிகள், முளைக்கட்டிய பயறுகள், உலர்ந்த பீன்ஸ், வேர்க்கடலை, வாழைப்பழங்கள், ப்ரோக்கோலி ஆகியவற்றை உட்கொள்வது இரத்தத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிகள் ஆகும்.

பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழங்களில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதாக அறியப்படுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் அதிக சர்க்கரை அளவைக் கொண்டிருப்பதால் அதிகமாக இதனை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Views: - 188

0

0