குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இதெல்லாம் சாப்பிடக்கூடாதாம்!

11 May 2021, 11:05 am
fruits to be avoided during breastfeeding
Quick Share

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சில வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், கை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் ஒரே உணவு என்பதால், சில உணவுகளை சிசுவின் உடல் ஏற்றுக்கொள்ளாது. இல்லையெனில் சில உடல்நலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, தாய்மார்கள் என்னென்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்  என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள்

தாய்ப்பாலுடன் சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃபிளேவர் கலந்தால் அது குழந்தைக்கு வயிற்று உப்பச பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அளவோடு சாப்பிடலாம்.

ஸ்ட்ராபெர்ரி

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகமாக ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிட்டால், குழந்தைக்கு தீவிர அழற்சி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாய்வு பிரச்சினை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் மற்றும் சில நேரங்களில் சரும அரிப்பு போன்ற சிக்கல்களும் நேரக்கூடும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இதை தவிர்ப்பது நல்லது.

அன்னாசி

அன்னாசிப்பழத்தில் உள்ள அசிட்டிக் அமிலம், தாய்ப்பாலுடன் கலக்கும்போது, குழந்தைக்கு அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.

கிவி

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கிவி பழத்தையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல. இந்த பழத்தில் உள்ள பொருட்கள் குழந்தைக்கு வாய்வு தொல்லை பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.

செர்ரி பழங்கள்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் செர்ரி பழம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்த பழம் ஒரு இயற்கை மலமிளக்க உணவாக உள்ளது. இதை அதிக அளவு உட்கொண்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

கொடிமுந்திரி

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிகமாக கொடி முந்திரியைச் சாப்பிடக்கூடாது. இதை அளவாக சாப்பிட்டால் பிரச்சினை ஏதும் இல்லை. அதுவே அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது குழந்தைக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

ஆப்பிள்

ஆப்பிள்கள் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும் என்றாலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அவற்றை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அதில் உள்ள நார்ச்சத்து காரணமாக, இது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படக்கூடும்.

Views: - 262

0

0