உங்கள் குழந்தைகளின் உணவுப் பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று!!!

Author: Hemalatha Ramkumar
11 February 2022, 9:58 am
Quick Share

பூசணிக்காய் நமது விருப்பமான உணவுப் பட்டியலில் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால், பூசணிக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதன் பல்வேறு நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பூசணிக்காயில் வைட்டமின் A நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது துத்தநாகம், செலினியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும். இது தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

இந்த காய்கறியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான பிரச்சனைகளுக்கும் இது பயன்படுகிறது. அதன் பல நன்மைகள் இருந்தபோதிலும், குழந்தைகளுக்கு பூசணிக்காயை ஊட்டுவது மிகவும் சிரமமான பணியாகும். கவலைப்படாதீர்கள்… இதற்கும் ஒரு தீர்வு உள்ளது. பூசணிக்காய் வைத்து சுவையான சூப் தயாரிக்கலாம், மற்றும் புதுமையான இனிப்பு உணவுகளையும் கூட செய்யலாம்.

Views: - 642

1

0