உடலில் ஆங்காங்கே உள்ள கொழுப்பு கட்டிகளை நிரந்தரமாக கரைக்க எளிய பாட்டி வைத்தியம்!!!

6 November 2020, 11:14 pm
Quick Share

கொழுப்பு கட்டிகளை இயற்கையான முறையில் கரைக்கக்கூடிய ஒரு அற்புதமான குறிப்பை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கொழுப்பு சத்துக்கள் நம் உடலின் தசை மற்றும் தோலுக்கு இடையில் சிறிய கட்டி போல உருவாகும். இதை தான் நாம் கொழுப்பு கட்டி என்று அழைக்கிறோம். இது ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல் நம் அழகையும் கெடுக்கும் விதமாக அமைந்து விடுகிறது. 

ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் தற்போது இந்த கொழுப்பு கட்டி உள்ளது. பொதுவாக இந்த கொழுப்பு கட்டி வருவதற்கு முக்கிய காரணம் மாறி வரும் உணவு முறை மாற்றங்கள், அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுப்பது, இரத்தம் சுத்தம் இல்லாமல் இருப்பது போன்றவை ஆகும். 

ஆங்கில மருத்துவத்தில் இந்த கொழுப்பு கட்டிகளை அறுவை சிகிச்சை மூலமாக தான் நீக்குவார்கள். ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் அக்கட்டி மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதுவே இயற்கை மருத்துவத்தை நாம் நாடும் போது இருக்கக்கூடிய கொழுப கட்டிகளும் கரைந்து, அவை மீண்டும் வராமல் இருக்க உதவி செய்கிறது. 

இந்த மருந்து செய்வதற்கு ஐந்து மிளகு எடுத்து கொள்ளுங்கள். அதனை ஒரு உரலில் போட்டு நைசான பவுடராக தட்டி எடுக்கவும். அடுத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கழற்சிக்காய் பொடியில் இருந்து 1/4 தேக்கரண்டி எடுத்து கொள்ளலாம். இப்போது இதனோடு ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். நமது மருந்து இப்போது தயாராக உள்ளது. 

நீங்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்த பிறகு இந்த மருந்தை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் இந்த மருந்தை நீங்கள் சாப்பிட்டு வரும்போது கொழுப்பு கட்டிகள் படிப்படியாக குறைவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். ஒரு வேலை இதனை தேனில் கலந்து சாப்பிட உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் இதனை ஒரு டம்ளர் மோரில் கலந்து கூட பருகலாம். 

இதில் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. இதனை கர்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் கர்பத்திற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் பெண்கள் எடுக்க கூடாது. ஏனெனில் இது அதிக இரத்த போக்கை ஏற்படுத்தி விடும். மேலும் பெண்கள் தங்களது மாதவிடாய் சமயத்தில் இம்மருந்து எடுப்பதை தவிர்க்கவும். இம்மருந்து எடுக்கும் போது உங்கள் உணவு முறைகளிலும் ஒரு சில மாற்றங்கள் செய்ய முயற்சி செய்யுங்கள். 

கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை குறைத்து கொண்டு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுங்கள். மேலும் உங்கள் உணவில் மஞ்சள் மற்றும் மிளகு ஆகிய இரண்டையும் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள். உதாரணமாக தினமும் ரசம் வைத்து பருகலாம். இதனை எல்லாம் நீங்கள் செய்து வரும்போது கொழுப்பு கட்டியானது விரைவில் கரைவது மட்டும் அல்லாமல் அது மீண்டும் தோன்றாமல் இருக்கும். 

Views: - 463

1

0