இந்த ஒரு செடி போதும் நீங்க சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லாம இருக்கலாம்!

15 September 2020, 10:16 am
health-and-medicinal-benefits-of-black-tulsi
Quick Share

கற்ப மூலிகைகள்னு சில தாவரங்கள் இருக்குங்க. அந்த மாதிரியான கற்பமூலிகைங்களோட பெயரைப் பார்த்தா அது கரு அப்படினு தொடங்கும். எடுத்துக்காட்டா சொல்லனும்னா கருவேப்பிலை, கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி இந்த மாதிரி மூலிகைச்  செடிகள் தாங்க கற்ப மூலிகைகள். இந்த வகையான மூலிகை செடியில நிறைய நல்ல மருத்துவ குணங்கள் இருக்குங்க. இப்போ நாம இந்த பதிவுல கருந்துளசி பற்றி தான் பாக்கப்போறோம்.

இந்த கருந்துளசிங்கிற தெய்வீக மூலிகை நம்ம சாதாரணமா வீட்டில வளர்கிற சாதாரண துளசி செடி போலவே தாங்க இருக்கும். ஆனா இதோட இலைகள், தண்டு மற்றும் பூ எல்லாமே கொஞ்சம் கருப்பு நிறம் கலந்த மாதிரி இருக்கும். இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட மூலிகைனும் சொல்றாங்க.

கருந்துளசி நன்மைகள்

 • இந்தக் கருந்துளசியினால ஏற்படும் நன்மைகளையும் அதை எப்படி எல்லாம் என்னென்ன பிரச்சினைக்கு பயன்படுத்தனும்னு இந்த பதிவுல பார்க்கலாம்
 • மிளகு கூட ஒரு 10 துளசி இலைகளை சேர்த்து மென்று விழுங்கிட்டா தொண்டையில் கட்டிபோல இருக்குற சளி மொத்தமா நீங்கிடும்.
 • காலையில் எழுந்திருச்சதும் நல்லா வாய்க் கொப்பளிச்சிட்டு 5 துளசி இலைகளை சாப்பிட்டா மலச்சிக்கல், வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சினைகள் எல்லாம் காணம போயிடும்.
 • வாய் துர்நாற்றத்தைப் போக்க கருந்துளசி இலைகளை பறிச்சு வாயில் போட்டு மென்றால் பற்களில் உள்ள கிருமிகள் எல்லாம் அழிந்துவிடும். நீங்க பேசும் போது கூட அப்படியே துளசி மணம் கமழும்.
 • துளசி இலைக்காக நீங்க அங்கேயும் இங்கேயும் தேடாம ஒரு செடி மட்டும் நீங்க வாங்கிட்டு வந்து வச்சிட்டா அது வளர்ந்து அதோட விதைப்பட்டு பல செடிகள் உற்பத்தி ஆகிடும். இந்த செடிக்கு அதிகம் தண்ணீர் எல்லாம் கூட தேவையில்லைங்க. இது வறட்சியை நல்லா தாங்கக்கூடியது. 
 • இரவுல செம்பு இல்லைனா பஞ்ச உலோகப்பாத்திரத்துல 10 துளசி இலைகளை நசுக்கிப் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து வச்சிடுங்க. இந்த தண்ணீரை காலையில வெறும் வயிற்றில் வாய் கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரை குடிங்க. இது போல நீங்க வழக்கமா குடிச்சு வந்தா உடல்ல உள்ள அனைத்து தாதுப்பிரச்னைகளும் தீர்ந்துடும். உங்க தேகமும் சருமமும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும். புற்றுநோய்கூட உடனே கரைந்துபோயிடும்னு சொல்றாங்க. கண்புரை ஏற்பட்டாலும் சரியாகிடும்.
 • கருந்துளசி சுற்றுப்புறச்சூழலுக்கு நட்புனானது. ஓசோன் படலத்தில் உள்ள பாதிப்பையும் சரி செய்யக்கூடியதுனு சொல்றாங்க.
 • இந்த கருந்துளசியை விடாம 48 நாட்களுக்கு எடுத்து வந்தால் சளி மற்றும் கபநோய்கள் எல்லாம் ஏற்படாமா உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
 • சளித்தொல்லைக்கு இந்த கருந்துளசி ஒரு அருமையான மருந்துங்க. இந்த செடிகளோட இலைகள் நம்ம உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
 • இந்த கருந்துளசி இலைகளை கொஞ்சம் எடுத்து தூய்மையான பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிச்சு வந்தோம்னா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 • கருந்துளசியை சுத்தமான நீரில் போட்டு நல்லா கொதிக்கவச்சு ஆவி பிடிச்சா இந்த தீராத சைனஸ் தொல்லைகளால ஏற்பட்ட சளி பிரச்சினை எல்லாம் ஓடியே போயிடும்.
 • அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை குடிச்ச அப்புறம் இலைகளை மென்று சாப்பிடனும்.
 • தினமும் அதிகாலையில வெறும் வயிற்றில 5, 4 கருந்துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வச்சிடலாம்.

இது போல மற்ற கற்ப மூலிகைகளோட நன்மைகளையும் அடுத்தடுத்த பதிவுல பார்க்கலாம். ஆரோக்கியமா இருக்கலாம். அக்கறையுடன் Updatenews360.

Views: - 32

0

0