பார்வையை மேம்படுத்தும் வாழைப்பழ தேநீர் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா…???

Author: Hemalatha Ramkumar
11 August 2022, 3:01 pm
Quick Share

பொதுவாக தேநீர் என்றால் பலருக்கும் பிடித்த ஒரு பானமாகும். கிரீன் டீ, பிளாக் டீ, மசாலா டீ என பல வகையான டீ உள்ளது. ஆனால் வாழைப்பழ தேநீர் குறித்து நீங்கள் என்றாவது கேள்விபட்டு இருக்கிறீர்களா.? ஆம், உண்மை தான். இந்த தேநீர் இதயத்தை வலுப்படுத்தும் திறன், செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் பார்வையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த தேநீர் நமக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

வாழைப்பழ தேநீர் தயாரிக்கும் முறை:- வாழைப்பழத்தை தண்ணீரில் வேகவைத்து, தோல் மற்றும் எல்லாவற்றையும் சேர்த்து தேநீர் செய்ய வேண்டும். பின்னர் அதை தண்ணீரில் இருந்து எடுத்து, பால் அல்லது பிளாக் டீயுடன் சேர்த்து, அதை உட்கொள்ளவும்.

வாழைப்பழ தேநீரின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்:
●செரிமானத்தை மேம்படுத்துகிறது: வாழைப்பழ டீ குடிப்பதால், வயிற்று உப்புசம் அல்லது அஜீரணம் உள்ளவர்கள், குடல் இயக்கத்தை மேம்படுத்தி, தசை வலியைப் போக்கலாம்.

வலுவான எலும்புகள்: வாழைப்பழ டீயில் உள்ள மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கீல்வாதம் அல்லது பலவீனமான எலும்புகள் பாதிக்கப்படும் நபர்களுக்கு இந்த தேநீர் பயனுள்ளதாக இருக்கும்.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது: இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் பொட்டாசியத்தில் இருந்து பயனடையலாம். உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்க ஒரு நாளைக்கு ஒரு கப் தேநீர் சாப்பிடுங்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது: வாழைப்பழ தேநீரில் உள்ள செரோடோனின் மற்றும் டோபமைன் ஆகியவை இயற்கையாகவே மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியாக உணர உதவும்.

மேம்பட்ட பார்வை: வாழைப்பழ தேநீரில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளடக்கம் பார்வையை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். விழித்திரை கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

Views: - 443

0

0