வெற்றிலைச் சாப்பிடுவதால் நடக்கும் இந்த விஷயங்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

Author: Hemalatha Ramkumar
10 August 2021, 11:54 am
health benefits of chewing paan or betel leaves
Quick Share

திருவிழாக்களின் போதும், வீட்டில் நடக்கும் விஷச நிகழ்வுகளின் போதும் வெற்றிலைகள் கொடுப்பது நம் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று. இதை நாம் ஒரு சம்பிரதாயம் ஆக மட்டுமே பார்க்கிறோம். ஆனால், உண்மையிலேயே சொல்லப்போனால் வெற்றிலையில் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. 

இந்த வெற்றிலைகளில் வைட்டமின் C, தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளது மற்றும் கால்சியம் சத்துக்களின் சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. வெற்றிலையை நாம் எளிதில் வீடுகளிலேயும் கூட ஒரு அலங்கார செடியாக வளர்க்கலாம் மற்றும் அதிலிருந்து அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

பெரும்பாலும் வெற்றிலையைப் பற்றி நாம் அறியாத சில மருத்துவ குணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  • நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க வெற்றிலை உதவியாக இருக்கும். வெற்றிலையில் உள்ள சேர்மங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது, இதனால் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க இது மிகவும் ஏற்ற ஒரு இயற்கை மருந்தாகும்.
  • உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வெற்றிலைகளை அவசியம் பயன்படுத்தலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டது மற்றும் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து உடல் எடை குறைப்புச் செயல்முறைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
  • வெற்றிலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய்வழி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க முடியும், ஏனெனில் இது உமிழ்நீரில் அஸ்கார்பிக் அமிலத்தின் அளவை பராமரிக்க உதவுகிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 10 முதல் 12 வெற்றிலையை சில நிமிடங்கள் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு அந்த வேகவைத்த தண்ணீரை ஆறவைத்து தேன் சேர்க்க வேண்டும். இதை தினமும் குடிப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
  • வெற்றிலை இலைகளை, காயத்தின் மேல் வைத்து கட்டினால், காயத்தை குணமாக்கி, குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்த முடியும். ஆயுர்வேத சிகிச்சை முறையில் புண்களுக்கு சிகிச்சையளிக்க வெற்றிலை அதிகமாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • நீங்கள் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டால், அதிலிருந்து மீண்டு வர வெற்றிலை உங்களுக்கு உதவியாக இருக்கும். வெற்றிலைகளுக்கு குளிர்ச்சியூட்டும் பண்புகள் உள்ளது, இது வெளிப்புறமாகப் பயன்படுத்தும்போது வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

Views: - 572

0

0