தேங்காய் எண்ணெயை தினமும் குடிப்பதா… எதற்காக மற்றும் எவ்வளவு குடிக்க வேண்டும்???

Author: Hemalatha Ramkumar
4 October 2022, 2:41 pm
Quick Share

பொதுவாக நாம் தேங்காய் எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தி வருகிறோம். கேரளா போன்ற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் அறிவோம். இருப்பினும் தேங்காய் எண்ணெயை குடிக்கலாம் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. ஒருவர் தினமும் எவ்வளவு தேங்காய் எண்ணெய் குடிக்க வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெயின் பல்வேறு வகைகள்:
தேங்காய் எண்ணெய் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை பிரித்தெடுக்கும் செயல்முறையின் காரணமாக ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.

1. வெர்ஜின் தேங்காய் எண்ணெய்
2. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்

வெர்ஜின் தேங்காய் எண்ணெய் சிறந்த நறுமணம், ஊட்டச்சத்து மற்றும் சுவையைக் கொண்டிருக்கிறது. இது சாதாரண தேங்காய் எண்ணெயுடன் ஒப்பிடுகையில் உலகம் முழுவதும் மெதுவாக பிரபலமடைந்து வருகிறது.
வெர்ஜின் தேங்காய் எண்ணெய் குடிப்பதற்கு ஏற்றது.

தினமும் எவ்வளவு வெர்ஜின் தேங்காய் எண்ணெய் உட்கொள்ள வேண்டும்?
வெர்ஜின் தேங்காய் எண்ணெயை தினமும் 30 மில்லி குடிப்பது உகந்த அளவு என்று பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு தேக்கரண்டி. எனவே, நீங்கள் தினமும் 2 டீஸ்பூன் வெர்ஜின் தேங்காய் எண்ணெயை உட்கொள்வது நல்லது.

வெர்ஜின் தேங்காய் எண்ணெயை தினமும் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, தீக்காயங்களை குணப்படுத்துகிறது, தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளைக் கொல்லுகிறது. எனவே, அதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதை நீங்கள் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.

Views: - 1483

1

0