நீர்க்கட்டி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும் நிலக்கடலை!!!

Author: Hemalatha Ramkumar
31 May 2023, 5:49 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

நிலக்கடலை பூமிக்கு அடியில் விளையக்கூடிய ஒரு பருப்பு வகை ஆகும். இது மணிலா வேர்க்கடலை போன்ற வேறு சில பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதில் பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு மற்றும் பிஸ்தா போன்றவற்றிற்கு இணையான ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நிலக்கடலையை உண்பதால் ஏற்படும் பயன்களில் ஒரு சிலவற்றை காண்போம்.

100 கிராம் அளவுள்ள நிலக்கடலையில்
கொழுப்பு 45 கிராம், புரோட்டின் 25 கிராம்
நார்ச்சத்து 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
கார்போஹைட்ரேட் 15 கிராம்
பொட்டாசியம் 200 மில்லி கிராம்
சோடியம் 50 மில்லி கிராம்
கால்சியம் 250 மில்லிகிராம்
இரும்புச்சத்து 7 கிராம்
வைட்டமின் B6 4 கிராம்
மெக்னீசியம் 12 கிராம்
சுமார் 600 கலோரிகள்
ஒமேகா – 3
போலிக் ஆசிட்
போன்ற ஊட்ட சத்துக்கள் அடங்கி உள்ளது. இவை மனித வளர்ச்சிக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சத்துக்கள் ஆகும்.

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று நீர் கட்டியாகும். பெண்களின் கருப்பையில் இருக்கக்கூடிய நீர்கட்டிகளை நீக்குவதில் போலிக் ஆசிட் அதிக பங்கு வகிக்கிறது. இந்த போலிக் ஆசிட் நிலக்கடலையில் அதிகம் காணப்படுகிறது. எனவே நிலக்கடலையை தொடர்ந்து உண்பதால் நீர்கட்டி பிரச்சனை குணமாகிறது.

நிலக்கடலில் பிரிட்டோபான் என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகையான அமினோ அமிலங்கள் செராடனின் என்ற வேதிப்பொருளை நமது உடலில் உற்பத்தி செய்கிறது. இது நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி மூளையில் உள்ள நரம்புகளை தூண்டுவதன் மூலம் நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. எனவே வயது முதிர்ந்தவர்களுக்கு வரக்கூடிய அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயை குறைக்கிறது.

நிலக்கடலையில் அதிக அளவு நன்மை தரும் கொழுப்புகள் மற்றும் ஒமேகா – 3 சத்து நிறைந்துள்ளது. இவை சருமத்தை பளபளப்பாக வைக்கவும் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி புரிகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 93

0

0