சுவையில் மட்டும் அல்ல, ஆரோக்கியத்திலும் இது ஒஸ்தி தான்!!!

Author: Hemalatha Ramkumar
24 August 2022, 12:00 pm
Quick Share

பன்னீர் அல்லது பாலாடைக்கட்டி பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் மென்மையாகவும், கிரீமியாகவும் இருப்பதால் இது பலரது ஃபேவரெட்டாக இருக்கிறது. மற்ற வகை பாலாடைக்கட்டிகளைப் போலல்லாமல், பன்னீர் எந்தவிதமான வயதான செயல்முறைக்கும் உட்படாது மற்றும் புதியதாக கருதப்படுகிறது. இது பல்துறையான ஒன்றாகவும் அமைகிறது.

வழக்கமான, கொழுப்பு குறைந்த மற்றும் கொழுப்பு இல்லாத பால் போன்ற எந்த வகையான பாலையும் பயன்படுத்தி இதை தயாரிக்கலாம். இது இந்தியாவில் ஒரு முக்கிய சைவ உணவுப் பொருளாகும். மேலும் பொரித்த பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா, கடாய் பன்னீர், ஷாஹி பனீர், பாலக் பன்னீர், பன்னீர் டிக்கா, தந்தூரி பன்னீர் மற்றும் பல ரெசிகள் பன்னீர் வைத்து செய்யப்படுகின்றன.

பன்னீர் புரதம் நிறைந்த ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்.226 கிராம் குறைந்த கொழுப்புள்ள பன்னீர் 163 கலோரிகள், 28 கிராம் புரதம், 6.2 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 2.3 கிராம் கொழுப்பை வழங்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, இதில் பாஸ்பரஸ், சோடியம், செலினியம், வைட்டமின் பி12, ரிபோஃப்ளேவின், கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் குளோரின், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நல்ல அளவில் உள்ளது.

ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருப்பதால், பன்னீர் ஜிம்மிற்குச் செல்பவர்களுக்கு புரதத்தின் சிறந்த மூலமாகும். பன்னீரின் சில நன்மைகள்:

இது உங்கள் எடையைக் குறைக்க உதவுகிறது – அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் எடை இழப்பு உணவுத் திட்டத்திற்கான சரியான உணவுப் பொருளாக அமைகிறது. இது வயிற்றை நிரப்புகிறது மற்றும் குறைக்கப்பட்ட கலோரி உட்கொள்ளல் காரணமாக எடை இழக்க உதவுகிறது.

இது தசை வளர்ச்சிக்கு உதவுகிறது – விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இடையே பன்னீர் அதிக அளவில் விரும்பப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள அதிக புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. பன்னீரில் உள்ள கேசீன் மோர் புரதத்தைப் போலவே தசையை வளர்ப்பதிலும் தசை முறிவைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது.

இது இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்க உதவுகிறது – இன்சுலின் எதிர்ப்பு வகை 2 நீரிழிவு மற்றும் இதய அபாயங்களை ஏற்படுத்துகிறது. பன்னீரில் உள்ள கால்சியம் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவுகிறது.

இது எலும்பு வலிமையை ஊக்குவிக்கிறது – கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் புரதம் ஆகியவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்கின்றன.

இதில் செலினியம் அதிகமாக உள்ளது – ஒரு கப் பன்னீர் செலினியத்திற்கான ஆர்டிஐயில் 37% நமக்கு வழங்குகிறது. இந்த தாது இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை அதிகரிக்க உதவுகிறது.

இதனால் பன்னீர் ஒரு சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது.

Views: - 954

0

0