கேட்போரை அசற வைக்கும் புளியின் நன்மைகள்!!!

Author: Hemalatha Ramkumar
8 September 2022, 5:37 pm
Quick Share

புளிப்பு என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது புளி தான். புளியில் சுவையுடன், பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இன்று புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வைட்டமின் சி, ஈ மற்றும் பி தவிர, புளியில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவை ஒன்றாக உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் தொகுப்பாகும்.

* பசியை உண்டாக்க புளி உதவுகிறது. இதற்கு வெல்லம், புளி, இலவங்கப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து குடித்து வர பலன் தரும்.

* செரிமான செயல்முறையை சரியாக வைத்திருக்க இது நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. இது தவிர, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கான சிகிச்சையிலும் புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

* நீங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், புளி உங்களுக்கு உதவும். புளியில் காணப்படும் ஹைட்ராக்ஸிசிட்ரிக் அமிலம் உடல் கொழுப்பைக் குறைக்கும் நொதிகளை அதிகரிக்கிறது.

* புளி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. இதன் காரணமாக உடலில் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் அதிகமாகிறது. மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

* கண்களில் வலி அல்லது எரிதல் இருந்தால், புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற சமயங்களில், புளி சாறுடன் பால் கலந்து கண்களுக்கு வெளியே தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

Views: - 777

0

0