தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

2 July 2021, 8:48 pm
health benefits of having sex in males
Quick Share

உடலுறவு கொள்வது என்பது இன்பத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் உடலுறவில் ஈடுபடும் இருவருக்குமே பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. பொதுவாக, உடலுறவு கொள்வதால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிணைப்பு மேலும் வலுவாகும் என்பது நமக்கு தெரியும். அதே போல இது வேறு பல நன்மைகளையும் கொடுக்கும். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  • ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும் என்று கூறப்படுகிறது. உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு உடல்நலகுறைபாடு ஏற்படுவது குறைவு என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வைரஸ் போன்ற நுண்கிருமிகளை எதிர்த்துப் போராட இது உதவுகிறது.
  • உடலுறவு கொள்வதால் இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும்.
  • உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள எண்ணி பலரும் பல உடற்பயிற்சிகளை மேற்கொள்வர். ஆனால் உடலுறவு கொள்வதாலும் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைத்தால் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவது நல்லது.
  • உடலுறவில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் உச்சகட்டத்தை அடைந்தாள் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே தூக்கமின்மைப் பிரச்சினையால் நீங்கள் அவதிப்பட்டால் உங்கள் துணையுடன் உடலுறவு கொண்டால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
  • வேலைப்பளு காரணமாகவும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதாலும் பலருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்கள் குறைய உடலுறவு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே கணவன் மனைவி இருவரும் மனமுவந்து தினசரி  உடலுறவில்  ஈடுபட்டால் மன அழுத்தப் பிரச்சினையின்றி இருக்கலாம்.
  • பொதுவாக அதிகம் கோபம் வந்தால் உயர் இரத்த அழுத்த பிரச்சினை ஏற்படக்கூடும். இது போல ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் சீராக இருக்க உடலுறவு உதவியாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • முதுமை பிரச்சினை இன்றி உடல் இளமையோடு ஆரோக்கியமாக இருக்க உடலுறவு கொள்வது உதவும்.
  • புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உடலுறவு கொள்வதால் குறையும் என்று அமெரிக்க மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Views: - 524

0

0