கருப்புகோழி பற்றி தெரியுமா உங்களுக்கு? அசைவ பிரியர்களே இதை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க!

Author: Dhivagar
1 September 2021, 6:10 pm
health benefits of kadaknath chicken
Quick Share

இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இல்லங்க வாரத்துல எல்லா நாளும் Non-Veg சாப்பிட்டால் கூட அசைவ பிரியர்களுக்கு சலிக்காது. அதுவும், இந்த அசைவ பிரியர்கள் எல்லோருமே வாராவாரம் ஏதாச்சும் புதுசு புதுசா ட்ரை பண்ணனும்னு நினைப்பார்கள். இந்த வாரம் என்ன Non-Veg ட்ரை பண்ணலாம்னு யோசிக்கிறீங்கனா இந்தப் பதிவை முழுசா படிங்க. சமீப காலமா பிரபலமா ஆகுற இந்த கடக்நாத் கோழி பற்றி பார்க்கலாம்.  

இந்த கடக்நாத் அல்லது கருங்கோழி அப்படிங்கறது மத்தியப் பிரதேசத்தோட நாட்டுக்கோழிகள் தாங்க. இந்தக் கோழியோட இறக்கை, கறி, ரத்தம், முட்டைனு எல்லாமே கருப்பு நிறத்துல தான் இருக்கும். இந்தக் கோழியில மெலனின் அப்படிங்கிற நிறமி அதிகமா இருக்கிறதாலதான் இந்த கோழி கருப்பா இருக்காம். யுனானி போன்ற வைத்தியமுறைகள்ல எல்லாம் இந்தக் கோழியோட மருத்துவகுணம் பற்றி சிறப்ப சொல்லப்பட்டிருக்காம்.

இந்தக் கோழியைச் சாப்பிடுறதுனால, அதுல இருக்க மெலனின்தன்மை காரணமாக நரம்புகள் வலுவடைந்து, நல்லா விரிவடையும்னு, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது ரொம்ப நல்லதுனும் சொல்றாங்க. அதுமட்டும் இல்லைங்க, மைசூரில் இருக்குற உணவு ஆராய்ச்சி மையம், இந்த  கருங்கோழியில இருக்க கொழுப்பு ரொம்ப தரமானதுனு சொல்லியிருக்காங்க. எல்லா நாட்டுக்கோழிங்களையும் போலவே இந்த கோழியோட ஒயிட் மீட் என்பதும் ரொம்ப சத்தானதுனு சொல்றாங்க. இதைச் சாப்பிடுறதுனால ரத்தம் அழுத்தம் கட்டுப்படுத்தப்படுமாம். இதய நோய் பிரச்சினை இருக்கவங்களுக்கு எல்லாம் இது ரொம்ப ஏற்ற ஒன்னுனும் சொல்றாங்க.

மத்தியப்பிரதேஷத்துல இருக்க மலைவாழ் மக்கள் இந்தக் கோழி ஆண்மை விருத்திக்கு ரொம்ப ஏற்றதுனும் சொல்றாங்க. அதேபோல பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் எல்லாம் இருந்தால் அதுவும் இந்த கருங்கோழிக்கறி சாப்பிட்டா நல்லா ஆகிடும்னு சொல்றாங்க.

கடக்நாத் கோழியோட முட்டையும் கருப்பு நிறத்துல தாங்க இருக்கும். எல்லா நாட்டுக்கோழியோட முட்டை இருக்குற மாதிரியே இதுலயும் நல்ல கொழுப்பு நிறைய இருக்குங்க. வளர்ர குழந்தைங்களுக்கு இது ரொம்ப சத்தான ஒரு  உணவு. மற்ற முட்டைகளைவிடவும் இதுல அமினோ அமிலங்கள் எல்லாம் அதிகம் இருக்குனும் சொல்றாங்க. பிரசவத்துக்கு அப்புறம் வர தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் மாதிரியான பிரச்சினைகளுக்கு எல்லாம் இந்த கருங்கோழி முட்டை சிறந்த மருந்தா இருக்குனும் சொல்றாங்க.

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும்னும் சொல்றாங்க.

ஹோமியோபதி மருத்துவத்துல, நரம்புத் தளர்ச்சி இருக்கவங்களுக்கு இந்த கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கிறதாவும் சொல்றாங்க… இந்த கோழிக்கறியில 25 சதவிதம் புரதச்சத்தும் வெறும் 0.73 -1.05 சதவீதம் மட்டுமே கொலஸ்ட்ரால் இருக்கறதாவும் சொல்றாங்க. இதனால இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கவங்க நல்லாவே எந்த பயமும் இல்லாம  சாப்பிடலாம்.

அப்புறம் என்னங்க, நீங்களும் உங்க பகுதியில இந்த கருங்கோழிக்கறி கிடைச்சா… ஒரு புடி புடிங்க… ஆரோக்கியமா இருங்க. அக்கறையுடன்Updatenews360

Views: - 576

0

1