நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் கட்டாயம் இந்த ஆசனம் செய்யணும்!

12 July 2021, 10:18 am
health benefits of kurmasana
Quick Share

உடலுக்கும் சரி மனதுக்கும் சரி யோகாசனம் செய்வது மிகவும் நன்மை தரக்கூடியது. ஆனால் என்என்னென்ன யோகாசங்களுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் கூர்மாசனம் செய்வதால் என்னென்னெ நன்மைகள் எல்லாம் கிடைக்கும், எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்கள் கால்கள் நேராக நீட்டிவிட்டு உங்கள் கைகளை உங்கள் இடுப்புக்கு அருகே தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் தொடைகளை தரையில் அழுத்தி, உங்கள் கால்களை வளைத்து, உங்கள் மார்பை உயர்த்தவும். 

உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் கால்களை நெகிழ்வாக வைத்து, அவற்றை உங்கள் இடுப்புக்கு நெருக்கமாக கொண்டு வாருங்கள். உங்கள் மார்பு மற்றும் கைகளை உங்கள் கால்களுக்கு இடையில் நீட்டவும்.

உங்கள் கால்களை இன்னும் அதிகமாக வளைத்து, உங்கள் கைகளை உங்கள் முழங்கால்களுக்கு கீழே வைக்கலாம். அடுத்து, உங்கள் கைகளை பக்கங்களில் நன்றாக நீட்டவும். கால்களுக்கு அழுத்தம் கொடுக்காமல், உங்கள் தொடைகளை நெகிழ்வாக வைத்து முன்பக்கத்தில் அப்படியே குனிய வேண்டும்.

மார்பு நன்கு விரிவடையும்படி நன்றாக சுவாசிக்க வேண்டும். ஒரு 10 வினாடிகள் இதை போல செய்ய வேண்டும். அதன் பிறகு மெல்ல பழைய நிலைகளுக்கு திரும்பிவிடுங்கள்.

ஆமை போன்ற வடிவம் கொள்வது என்பது தான் கூர்மாசனம் என்பதன் அர்த்தம். கூர்மாசனம் செய்வதால் கால்கள், வயிறு, முதுகு தண்டு, தொடைப்பகுதி ஆகியவை நீட்சியடையும்.

ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தமான சுவாச பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த யோகாசனத்தின் மூலம் நிவாரணம் கிடைக்கும். தினமும் இதை தவறாமல் செய்து வந்தால் உங்களுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும்.

இந்த ஆமை போன்ற வடிவிற்கு உடல் செல்லும்போது தைமஸ் சுரப்பி நன்றாக செயல்படும் என்றும் இதனால் நோயெதிர்ப்பு ஆற்றல் மேம்படும் என்றும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கூர்மாசனம் செய்வதால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை உடலே எதிர்த்து போராடும் திறன் கிடைக்கிறது.

கூர்மாசனம் செய்வதால் இன்சுலின் ஹார்மோன்  உற்பத்தி மற்றும் செயல்பாடு மேம்படும் என்பதால் நீரிழிவு நோய் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் விரைவில் நிவாரணம் பெற முடியும்.

இந்த கூர்மாசனம் செய்யும்போது உடலின் தசைகள் நீட்சியடையும் என்பதால் உடலின் உறுப்புகள் பலமடைகிறது. அது மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்றம் சீராக நடைபெறும். இதனால் விரைவில் கலோரிகள் குறையும் என்பதால் உடல் எடையைக் குறைக்க ஆர்வமாக இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள யோகாசனம் ஆகும்.

செரிமான கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இந்த யோகாசனம் செய்வதால் வயிறு மற்றும் குடல் பகுதி உள்ளிட்ட உள் உறுப்புகள் நன்றாக செயல்பட தொடங்கி செரிமானம் சீராக நிகழும். இதனால வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் கை, கால்களை நீட்டி இந்த யோகாசனம் செய்வதன் மூலம் உடல் வலி உட்பட உடல் பிரச்சினைகள் எல்லாம் குணமடையும் என்பதால் மன அமைதி கிடைக்கும். இரவில் நன்கு தூக்கம் வரும். எனவே உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் கட்டாயம் இந்த யோகாசனம் செய்ய வேண்டும்.

Views: - 111

0

0