எலுமிச்சையை விட அதன் தோலுக்கு மவுசு அதிகம்! ஏன்னு தெரிஞ்சிக்கணுமா?

14 June 2021, 3:28 pm
health benefits of lemon peel
Quick Share

கோடைக்காலம் அல்லது குளிர் காலம் எல்லா காலத்திலும் நமக்கு கிடைப்பது எலுமிச்சை பழம். இந்தியாவில் எலுமிச்சை பழம் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்று. பலர் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து அதனுடன் தேன் சேர்த்து தினமும் பருகி வருகிறார்கள். அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பொதுவாக எலுமிச்சை சாற்றை பிழிந்த பிறகு அதன் தோலை நாம் தூக்கி வீசுவது வழக்கம். ஆனால் இந்த பதிவை படித்த பிறகு நிச்சயம் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். ஆம்….எலுமிச்சை தோலில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில் முக்கியமானது என சொன்னால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இன்ஃபெக்ஷனில் இருந்து நம்மை காக்கும்.

எலுமிச்சையை விட அதன் தோலுக்கு சத்து அதிகம். எலுமிச்சை தோலில் அதில் உள்ள சாற்றை காட்டிலும் 5-10 மடங்கு அதிக வைட்டமின்கள்  உள்ளது. எலுமிச்சை பயன்படுத்துவது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு இன்ஃபெக்ஷனில் இருந்து நம்மை காப்பாற்றும். ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்த எலுமிச்சை தோல் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் மற்றும் ஃபிரீ ராடிக்கல்ளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் எலுமிச்சை தோலில் காணப்படும் பொருட்கள் கேன்சர் செல்களை அழித்து கீமோதெரபியை காட்டிலும் 10,000 மடங்கு அதிகமாக வேலை செய்கிறது. எனவே இனியும் எலுமிச்சை தோலை தூக்கி போட்டு விடாமல் அதனை பயன்படுத்தி வாருங்கள். 

எலுமிச்சை தோலை முழுமையாக பயன்படுத்துவது கடினமாக இருக்கும். எனவே அதனை சீவி பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை கழுவி ஃபிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் வைத்து விடுங்கள். கட்டியான பிறகு அதனை சீவுவது சுலபம். தோலை உரிக்க வேண்டாம். 

இதனை சூப், நூடுல்ஸ், தண்ணீர், மீன், தானியங்கள் என அனைத்து உணவுகளிலும் தூவி பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது அந்த உணவின் சுவையும் கூடுவதோடு ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த பகுதியையும் வீணடிக்காமல் எலுமிச்சையை முழுமையாக நாம் பயன்படுத்துகிறோம் என்பதே ஆகும். ஆதலால் அடுத்த முறை எலுமிச்சை பழத்தை பயன்படுத்தும் போது இதனை மறந்து விடாதீர்கள்.

Views: - 230

0

0