பாம்பே கடிச்சாலும் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது இந்த மூலிகை! இதை பற்றி உங்களுக்கு தெரியாம இருக்கக்கூடாது!

Author: Dhivagar
28 July 2021, 11:00 am
health benefits of nilavembu kashayam
Quick Share

நிலவேம்பு என்பது ஒரு மூலிகை ஆகும். இது சிறியாநங்கை என்றும் அழைக்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த மூலிகை டானிக் சித்த மருத்துவத்தில் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது, இது காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் சோர்வு ஆகியவற்றுக்கு தீர்வளிக்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த டானிக் COVID-19 க்கு எதிராக நோயெதிர்ப்புச் சக்தியை உருவாகும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். தொற்றுநோய் தீவிரமாக பரவும் இந்த கடினமான காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை 60 மில்லி நிலவேம்பு கஷாயத்தைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்த முடியும் என்று இந்திய அரசின் கீழ் இயங்கும் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இந்த சிறியாநங்கையின் இலையை உண்டால், பயங்கரமாக கசப்பு சுவைத் தெரியும். இந்த மூலிகை உடலுக்கு வலிமை அளிக்கக்கூடிய ஒன்று என்பதோடு அதேசமயம் உங்களுக்கு அழகு சார்ந்த சரும நன்மைகளை வழங்கவும் மிகவும் ஏற்ற ஒன்று. இது நீரிழிவு நோய்க்கான அருமையான மருந்து என்றும் சொல்லப்படுகிறது. 

பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான சண்டையில் கீரி பாம்பைக் கொண்ட பிறகு இந்த சிறியா நங்கையைச் சாப்பிட்டு அதன் காயங்களை ஆற்றிக்கொள்ளுமாம். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்று கிராமங்களில் இன்றளவும் பிரபலமான பழமொழி உண்டு. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தல் உடனே இந்த இலையைத் தான் மென்று சாப்பிட சொல்வார்கள். இதை சாப்பிட்டதும் விஷம் இறங்கிவிடுமாம். இதனால் இந்த இலையைச் சாப்பிட்டால் உடலில் உள்ள விஷமெல்லாம் முறிந்து உடல் வலிமைப் பெறும்.

இது ஒரு ஆயுர்வேத மருந்து. குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலமிளக்கி, படபடப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் மண்ணீரல் தொடர்பான நோய்களுக்கு நல்ல மருந்து. மேலும் பெரியவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் இது மிகவும் ஏற்ற மருந்தாகும்.

இது சுவாச பிரச்சினைகளை நீக்கும் வல்லமைப் பெற்றது. மஞ்சள் காமாலைக்கு கீழநெல்லி மட்டுமல்லாமல் இதுவும் சிறந்த மருந்து என்று சொல்லல்படுகிறது. மலேரியா போன்ற நோய்களிலிருந்து குணமடைய நில வேம்பு கஷாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இது ஒரு இயற்கை இரத்த சுத்திகரிப்பு மூலிகை என்பதால், ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்தங்களை நீக்க மிகவும் ஏற்ற ஒன்று. பூச்சிக்கடி, வண்டுக்கடி போன்ற நாட்பட்ட அழற்சி பிரச்சினைகளையும் இது போக்க வல்லது. செரிமான அமைப்பில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்து நம் உடலைச் சீராக இயங்க வைக்க வல்லது.

Views: - 647

0

0