நோயெதிர்ப்பு முதல் இதயப் பாதுகாப்பது வரை நீங்க நம்பவே முடியாத பல நன்மைகள் தரும் மாதுளை!

19 July 2021, 10:29 am
Health benefits of pomegranate:
Quick Share

நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து நம் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பது வரை மாதுளம்பழத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பொதுவாகவே சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானவையாக அறியப்படுகிறது. மாதுளை ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைரஸ் எதிர்ப்பு மற்றும் டியூமர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் வைட்டமின் E, மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகக் கூறப்படுகிறது. 

மாதுளம் பழம் புனிகாலஜின் மற்றும் பியூனிக் அமிலம் ஆகிய இரண்டு சேர்மங்களைக் கொண்டுள்ளது. இது அனைத்து சக்திவாய்ந்த நன்மைகளையும் தருகிறது. 

தினசரி மாதுளை சாப்பிடுவது, அல்லது ஜூஸ் குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறந்த ஊக்குவிப்பாக இருக்கும், டைப்-2 நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க, செரிமானத்தை மேம்படுத்த மற்றும் சருமத்தைப் பளபளக்கச் செய்ய என ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை இது கொண்டுள்ளது.

எனவே, தினசரி ஒரு மாதுளையாவது உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மறவாதீர்கள். 

மாதுளைப்பழம் பொதுவாகவே மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் மிகவும் பாதுகாப்பானதும் கூட மற்றும் இதை நேரடியாக அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போன்றும் குடிக்கலாம். இதனால் எந்தவொரு தீமைகளுமே நிகழாது. எனினும் மாதுளை சாறு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது சில சந்தர்ப்பங்களில் சில குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். அரிப்பு, வீக்கம், மூக்கு ஒழுகுதல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, அளவோடு இந்த பழக்கத்தை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.  

சரி இப்போது இதனால் கிடைக்கும் பல நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

1. ஃப்ரீ  ரேடிக்கல்ஸ் இடமிருந்து பாதுகாப்பு

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், முன்கூட்டிய வயதாகும் அறிகுறிகளுக்கு காரணமாக இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்க இது உதவியாக இருக்கும். ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சூரிய ஒளியில் வெளிப்படுத்துவதன் மூலமும் சுற்றுச்சூழலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் காரணமாகவும் உருவாகின்றன. இதை நீக்கி உடலைப் பாராமரிக்கும் தன்மை மாதுளைக்கு உண்டு.

2. இரத்தத்தை மெலிதாக்கும்

மாதுளையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் இரத்தத்தை மெல்லிதாக்கக்கூடியது. மாதுளையின் விதைகள் உங்கள் இரத்த பிளேட்லெட்டுகள் உறையாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டவை. அதே போல உடலில் ஏற்படும் இரத்த உறைவு பிரச்சினைகளையும் குணப்படுத்த வல்லது.

3. பெருந்தமனி தடிப்புத் தடுப்பு

வயதாவதாலும் மற்றும் நாம் வாழும் வாழ்க்கை முறையினாலும், கொழுப்பின் காரணமாக நமது தமனிகளின் சுவர்கள் கடினமடையக்கூடும், இதன் விளைவாக சில நேரங்களில் இதயத்தில் அடைப்புகள் ஏற்படுகின்றன. மாதுளையின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்பு கெட்ட கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அடைவதைத் தடுக்கிறது. எனவே, மாதுளை சாப்பிடுவதால் அதிகப்படியான கொழுப்பை நீக்கி, தமனி சுவர்கள் கடினமாவதைத் தடுக்கப்படுகிறது.

4. ஆக்ஸிஜன் மாஸ்க் போல செயல்படும் மாதுளை

நம் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்க செய்ய மாதுளை உதவுகிறது. மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காரணமாக, இது ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகிறது, கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் இரத்த உறைவைத் தடுக்கிறது. இவை அனைத்தும் இறுதியில் இரத்தத்தை சுதந்திரமாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல உதவுகிறது, இதனால் உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவு மேம்படுத்தப்படும்.

5. கீல்வாத பிரச்சினையைத் தடுக்கிறது

குருத்தெலும்புகளில் சேதத்தை ஏற்படுத்தும் நொதியுடன் போராடுவதன் மூலம் மாதுளை குருத்தெலும்புகளின் சேதத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மாதுளை வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

Views: - 292

0

0

Leave a Reply