கொரோனா போன்ற நோய்கள் வராமல் எதிர்ப்பு சக்தி தரும் சுண்டைக்காய்!

28 August 2020, 9:17 am
health-benefits-of-sundaikai
Quick Share

காய்கறிகளிலேயே மிகவும் சின்ன காய் என்றால் அது சுண்டைக்காய் தாங்க. இந்த சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்கள் எல்லாம் நிறைஞ்சு கிடைக்கும் சேமிப்புக் கிடங்குனு கூட சொல்லலாம்ங்க. அட ஆமாங்க, உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை நிறைய வேலைகளைச் செய்யக்கூடிய பெரிய அளவிலான மருத்துவ குணங்கள் எல்லாம் இந்த சுண்டைக்காய்ல இருக்குங்க. 

தேவையில்லாத செல் பாதிப்புகள் எல்லாம் நம்ம உடம்புல ஏகப்பட்ட வியாதிகளை கொண்டு வந்து சேர்த்திடும்ங்க. அது போன்ற செல் பாதிப்பு பிரச்சினை எல்லாம் இந்த சுண்டைக்காய் சாப்பிட்டா வராதுங்க. நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும் போது நல்ல ஒரு சுறுசுறுப்பைத் தந்து உடலைத் தேற்றும் சக்தியும் இந்த சுண்டைக்காயில் இருக்குங்க. 


நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் ரொம்ப அவசியம்ங்க.  அதே போல வைட்டமின் A,C,E மாதிரியான சத்துக்களும் நம்ம உடம்புக்கு தேவை, இந்த சுண்டைக்காய்ல இந்த சத்துக்கள் எல்லாம் எக்கச்சக்கமாக இருக்குங்க.

குறிப்பாக இந்த கொரோனா சமயத்துல நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் C உள்ள உணவு பொருளை எடுத்துக்கோங்கனு டாக்டர் எல்லாம் சொல்லுறாங்க. அந்த மாதிரி வைட்டமின் C அதிகமா இருக்குற உணவு தாங்க இந்த சுண்டைக்காயும். ஆரஞ்ச், கொய்யா, பப்பாளி மாதிரியான பழங்கள்ல இருக்குற அளவுக்கு வைட்டமின்-C இந்த சுண்டைக்காயிலையும் இருக்குங்க.

இந்த சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி சீரா வச்சிருக்கும்ங்க. ரத்தத்தில கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்கள்ல சேர்ந்து ஏதாச்சும் பிரச்சினை ஏற்படுத்தாம தவிர்க்குற மிக அற்புதமான சக்தி இதுக்கு இருக்குங்க. 

ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்பு இந்த காய்க்கு இருக்குங்க. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிச்சு அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை நல்ல அதிகப்படுத்தும்.

இந்த சுண்டைக்காய்ல இருக்குற இரும்புச் சத்து அனீமியா அப்படிங்கற ரத்தச் சோகையை எதிர்த்து போராடக்கூடியது. கேழ்வரகு, கீரை போன்ற உணவுகள்ல இருக்க அளவுக்கு இந்த சுண்டைக்காயில் இரும்புச் சத்து அதிகம் இருக்குங்க.

உங்களுக்கு காய்ச்சல் இருக்க நேரத்தில சுண்டைக்காயை சேர்த்துக்கிட்டா வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கரதோட காய்ச்சலையும் குணப்படுத்தி உடம்புல இருக்க காயங்களையும், புண்களையும் நல்லா ஆற வைக்கும் தன்மையும் இதுக்கு இருக்குங்க.

வாய் புண், சொத்தைப்பல், உருவாவதையும் தடுக்ககூடிய சக்தி இந்த சுண்டைக்காய்ல இருக்குங்க.

நரம்பு மண்டலத்துக்கு ஆற்றல் கொடுக்ககூடியதுங்க, அதுமட்டுமில்லாம. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் சிறப்பா இருக்கவும், இது உங்களுக்கு பெரிய உதவியா இருக்கும்ங்க.

சித்த மருத்துவத்தில் இந்த சுண்டைக்காயை நிறைய நோய்களைக் குணப்படுத்தவும். பல மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துறாங்க.

பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாடு கொடுக்கறப்போ ‘அங்காயப் பொடி’ அப்படினு ஒன்னு கொடுப்பாங்க. அதுல முக்கியமா சேர்கக்ப்படுறது இந்த சுண்டைக்காய்தாங்க.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, செரிமானம் ஆக, உடம்புல இருக்க நச்சுப்பொருட்களை  நீக்கி நல்லது செய்யனு இந்த சுண்டைக்காய்ல அவ்ளோ நன்மைகள் இருக்குங்க.

இனிமேல்  நீங்களும் மறக்காம இந்த சுண்டைக்காயை உங்க உணவுல சேர்த்துக்கோங்க, ஆரோக்கியமா இருங்க. அக்கறையுடன் Updatenews360.

Views: - 13

0

0