இந்த அரிசியில பிரியாணி செஞ்சா அடடா… அமோகமா இருக்கும்! ஆனா இதெல்லாம் யாருக்குமே தெரியமாட்டேங்குதே!

10 July 2021, 5:51 pm
health benefits of traditional rice variety sornamasoori
Quick Share

நாகரீகம் என்று சொல்லி சொல்லி பாரம்பரியத்தை மறந்துபோய் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமெல்லாம் உண்மையாகவே அறிய பொக்கிஷத்தை கலந்துகொண்டு இருக்கிறோம் என்று தான் சொல்லணும். அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரிய நெல் வகைகள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் இந்த அற்புதமான சொர்ணமசூரி. இந்த நெல் வகையில் பிரியாணி செய்து சாப்பிட்டால் அடடா அமோகமாக இருக்கும். இதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சொர்ணமசூரி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நெல் ரகம் ஆகும். இந்த நெல்லானது பொன்னிறமாக இருப்பதால் இதற்கு சொர்ணமசூரி என்ற பெயர் பெற்றது. இது தங்கம் போல பளபளவென இருக்கும். இந்த நெல் வகையை அறுவடை செய்ய 120 முதல் 130 நாட்கள் வரை ஆகும்.

ஒரு ஏக்கரில் இதனை பயிரிடும் போது அதிலிருந்து நமக்கு இருபத்தி எட்டு மூட்டை நெல் கிடைக்கும். இந்த நெல்லானது வெள்ளை நிற அரிசியை கொடுக்கும்.

இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி வெண்மையாக இருக்கும் காரணத்தினாலும், மெலிந்து காணப்படுவதாலும், அதோடு சுவையாகவும் இருப்பதால் சீரக சம்பா அரிசிக்கு அடுத்தபடியாக பிரியாணி சமைப்பதற்கு இந்த அரிசி தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதன் பழைய சாதம் மிகுந்த சுவையாகவும், மூன்று நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும்.

சொர்ணமசூரி அரிசியை எடுக்கும் போது நமது நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். எனவே தொடர்ந்து இந்த அரிசியை எடுத்து வந்தால் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். எனவே இது உணவாக மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் ஒரு மாமருந்தாக கருதப்படுகிறது. அதோடு இதில் கஞ்சி வைத்து எடுக்கும் போது பித்தம், வாயு போன்றவைகளுக்கு தீர்வாக அமைகிறது.

ஆற்றுப்பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனம் போன்ற எளிய முறை பராமரிப்பு இந்த நெல் வளர போதுமானதாக இருக்கும். நேரடி நடப்பு மற்றும் விதைப்பிற்கு ஏற்ற வகை இது. இயற்கை சீரழிவுகளை ஓரளவு தாக்குப்பிடிக்கக்கூடிய இந்த நெல் வகை செயற்கை இரசாயனங்கள் இல்லாமலே செழித்து வளரும்.

சொர்ணமசூரி நெல் வகையைப் பற்றிய தகவல்களை இப்போது தெரிந்து கொண்டோம். பாரம்பரியத்தை காப்போம், நலமுடன் வாழ்வோம். சமூக நலன் கருதி updatenews360.

Views: - 92

0

0

Leave a Reply