பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனையைப் போக்கும் பாட்டி வைத்தியம்

Author: Dhivagar
30 June 2021, 10:09 am
home remedies to cure white discharge in women
Quick Share

கற்றாழை ஜூஸை சுலபமாக அனைவரது வீட்டிலும் செய்யலாம். கற்றாழை ஜூஸ் என்றாலே கசக்கும் என்ற பரவலான ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் அதனை சரியாக செய்தால் கசப்பு தன்மை என்பது துளியும் இருக்காது. தற்போது ரோட்டோரங்களில் கூட கற்றாழை ஜூஸ் விற்கப்படுகிறது. கற்றாழை என்பது சுலபமாக கிடைக்க கூடிய ஒரு செடி. அதனை வீட்டில் வளர்ப்பதும் எளிது. எனவே கற்றாழை சாற்றை காசு கொடுத்தெல்லாம் வாங்கி குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கற்றாழை சாறானது உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் நமக்கு பல நன்மைகளை தரக்கூடியது. அதில் முக்கியமான ஒரு நன்மை என்று சொல்லும் போது பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்வது. கற்றாழையை சரியான முறையில் எடுத்து வரும் போது அதிகமான வெள்ளைப்படுதல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த தீர்வினை தருகிறது.

எல்லா பெண்களுக்கும் பொதுவாக சிறிதளவு வெள்ளைப்படுதல் இருக்கும். அது சாதாரணமான விஷயம் தான். ஆனால் அதுவே அசாதாரணமான விதத்தில் வெள்ளைப்படுதல் வெளியேறும் போது அது கவனிக்கத்தக்க விஷயம் ஆகின்றது. வழக்கத்தை விட அதிகமாக வெள்ளைபடுதல், இதோடு எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கம் இருப்பவர்கள் நிச்சயமாக பெண்கள்நல நிபுணரை ஆலோசிக்க வேண்டும். இதற்கு கற்றாழை ஜூஸ் ஒரு நல்ல மருந்தாக அமைகிறது. அதனை எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.

கற்றாழை ஜூஸ் செய்வதற்கு முதலில் ஒரு கற்றாழை இலையை பறித்து எடுத்து கொள்ளுங்கள். அதனை ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவுங்கள். அப்போது தான் அதன் கசப்பு தன்மையும் வெளியே இருக்கும் வழவழப்பும் போகும்.ஒரு நல்ல கூர்மையான கத்தி கொண்டு இரண்டு ஓரங்களில் இருக்கும் முட்களை நீக்கி விட்டு அதனை இரண்டாக வெட்டுங்கள். இப்போது அதில் உள்ள சதையை கத்தியை கொண்டு பொருமையாக எடுங்கள். இந்த சதையில் உள்ள கசப்பு தன்மை போக அதனையும் நன்றாக கழுவி விட வேண்டும். இந்த கற்றாழை சதையோடு 2 – 3 தேக்கரண்டி சீரகம் சேர்த்து இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். சீரகம் கற்றாழையில் நன்றாக ஊறிய பிறகு அதனை மிக்ஸியில் போட்டு சிறிதளவு மோர் கலந்து  அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் கற்றாழை ஜூஸ் தயாராகி விட்டது.

குறிப்பு:

கற்றாழை இலையை பறித்த உடனே அதனை ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவினால் தான் அதில் இருந்து வரும் கசப்பு தரக்கூடிய பச்சை நிற சாற்றை வெளியேற்றலாம். சீரகம் கற்றாழையில் நன்றாக ஊற வேண்டும். அப்போது தான் அது நன்றாக அரைப்படும். இந்த கற்றாழை ஜூஸானது உடல் சூட்டையும் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே வெயில் காலத்தில் இதனை பருகி வர உடல் உஷ்ணம் குறையும்.

Views: - 385

0

0