நெஞ்சுக்கரிப்பு பிரச்சினை உங்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறதா? சிம்பிளான 15 பாட்டி டிப்ஸ் உங்களுக்காக

Author: Hemalatha Ramkumar
17 August 2021, 3:44 pm
Home Remedies to Get Rid of Acidity
Quick Share

நமது வயிறு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை (HCL) உற்பத்தி செய்கிறது, இதன் விளைவாக நாம் உண்ணும் உணவை உடைக்கிறது. நம் வயிற்றில் உள்ள இரைப்பை சுரப்பிகள் இயற்கையாகவே இந்த அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த அமிலம் இரைப்பைச் சுரப்பிகளால் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு மேலே தள்ளப்படும்போது, ​​நம் மார்பில் எரிச்சல் உணர்வை அனுபவிக்கிறோம். இதைத்தான் நாம் நெஞ்சுக்கரிப்பு (Acidity) என்கிறோம்.

நெஞ்சுக்கரிப்பால் பொதுவாக மார்பில் அல்லது தொண்டையில் வலி, எரிச்சல் உணர்வு  இணைக்கப்படுகிறது. இதனால் வறட்டு இருமல், வாய் அல்லது தொண்டையில் புளிப்பு அல்லது கசப்பான சுவையில் அமில எச்சம், குமட்டல், தலைவலி, விக்கல், டிஸ்ஃபேஜியா எனும் தொண்டையில் உணவு சிக்கிக்கொண்ட உணர்வு, கருப்பு மலம் மற்றும் தீவிர நிகழ்வுகளில் இரத்தக்கலந்த மலம் அல்லது இரத்தக்கலந்த வாந்தி போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்.

நெஞ்சுக்கரிப்பு காரணங்கள் 

 • அதிகமாக உணவு உட்கொள்ளுதல், 
 • காரணமான உணவுகளை சாப்பிடுதல்
 • சாப்பிடாமல் தவிர்ப்பது 
 • நினைத்த நேரத்தில் சாப்பிடுவது
 • உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்வது
 • தூங்கும் முன் சாப்பிடுவது
 • இரத்த அழுத்த மாத்திரைகள் சாப்பிடுவது
 • வறுத்த எண்ணெய் உணவுகள் 
 • கார்பனேற்றபட்ட உணவுகள்
 • அதிகமாக காபி, டீ குடிப்பது 
 • தூக்கமின்மை
 • குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது 
 •  மன அழுத்தம் 
 • மது அருந்துதல் 
 • புகைபிடித்தல்
 • உடல் பயிற்சி இன்மை 

நெஞ்சகரிப்பு பிரச்சினைக்கான வீட்டு வைத்தியங்கள்

1. குளிர் பால்

குளிர்ந்த பால் குடிப்பது அமிலத்தன்மையில் இருந்து நிவாரணம் அளிக்கும். பாலில் கால்சியம் நிறைந்துள்ளதால் வயிற்றில் அமிலம் சேர்வதை தடுக்கிறது.

2. தேங்காய் நீர்

தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன, இது அதிகப்படியான அமில உற்பத்தியை சமநிலைப்படுத்துகிறது.

3. சீரகம் விதைகள்

கொஞ்சம் சீரக விதைகளை அப்படியே வாயில் போட்டு மெல்லலாம் அல்லது 1 டீஸ்பூன் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கருப்பு சீரக விதைகள் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல், குமட்டல், வீக்கம், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளைத் தடுக்கும்.

4. பெருஞ்சீரகம் 

அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் பெற ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதையை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடுங்கள். பெருஞ்சீரகம் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வாயு மற்றும் வீக்கத்தை தடுக்கிறது.

5. வெதுவெதுப்பான நீர்

காலையிலும், படுக்கை நேரத்திலும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். இது செரிமானத்தை அதிகரிக்கிறது. பின்னர், இது அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.

6. ஏலக்காய்

அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் இரைப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுங்கள்.

7. தர்பூசணி சாறு

அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் பெற தினமும் ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு குடிக்கவும்.

8. மோர்

மோரில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது, இது வயிற்றை ஆற்றும் மற்றும் அமிலத்தன்மையை சீராக்குகிறது. அமிலத்தன்மையில் இருந்து உடனடி நிவாரணம் பெற ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் கொத்தமல்லியுடன் ஒரு கிளாஸ் மோர் குடிக்கவும்.

9. இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுவது அல்லது இஞ்சி டீ குடிப்பது அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளைத் தடுக்க உதவியாக இருக்கும். இது செரிமானத்தையும் மேம்படுத்தும்.

10. கிராம்பு

உங்கள் வாயில் ஒரு கிராம்பு துண்டை வைத்து எச்சில் விழுங்கவும். கிராம்பு அமிலத்தன்மை, இரைப்பை எரிச்சல், அஜீரணம் மற்றும் குமட்டல் ஆகியவற்றிலிருந்து விடுபட உதவும்.

11. வாழைப்பழம்

வாழைப்பழம் அமிலத்தன்மையை போக்கி வயிற்றை ஆற்றும். அமிலத்தன்மையைத் தடுக்க பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக உட்கொள்ளுங்கள்.

12. பப்பாளி

பப்பாளியில் இரைப்பை அமிலச் சுரப்பைக் குறைக்கும் மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கும் பபைன் (papain) என்ற நொதி உள்ளது.

13. ஓமம்

ஓமம் ஒரு சிறந்த அமில எதிர்ப்பு பொருளாகும். இது அமிலத்தன்மையை நீக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.

14. மஞ்சள்

மஞ்சள் ஒரு மந்திர மசாலா ஆகும். இது நம் உடலுக்கு அதிசயங்களைச் செய்யும். இது அமிலத்தன்மையை போக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் உதவும்.

15. வெல்லம்

செரிமானத்திற்கு வெல்லம் சிறந்தது. எனவே, இது அமிலத்தன்மையில் உடனடி நிவாரணம் பெற உதவும், நெஞ்செரிச்சல் குறைந்து தொண்டை அல்லது மார்புப் பகுதியை ஆற்றும். எனவே, உங்கள் உணவுக்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது நெஞ்சுக்கரிப்பு பிரச்சினைகளைத் தணிக்க உதவும்.

Views: - 771

0

0