டெலிவரிக்கு பின் உடல் எடை அதிகரித்து விட்டதா… கவலைய விடுங்க… இத மட்டும் செய்தா ஈசியா ஸ்லிம்மாகிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
29 May 2023, 3:46 pm
Quick Share

பொதுவாக பிரசவத்திற்கு பின்பு பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு அதிகரிக்க கூடிய உடல் எடையை மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் உடனடியாக குறைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்த உடல் எடையை உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் மூலம் சிறிது சிறிதாக குறைப்பது நல்லதாகும்.

உணவு பழக்கம்:
காலை உணவுகளில் கண்டிப்பாக நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள பழ வகைகள் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் நார்ச்சத்துக்கள் நமது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.
ஓட்ஸ் போன்ற குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை உண்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

முட்டையின் வெள்ளை, கரு பச்சை காய்கறிகள், பருப்பு, முளைகட்டிய பயிர்கள் போன்ற புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை உண்பது நல்லது. குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள், எண்ணெய் தின்பண்டங்கள், அதிக கொழுப்பு உடைய மாமிச உணவுகள், அதிகப்படியான உப்பு மற்றும் காரம் உடைய உணவுகள் போன்ற அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

தாய்ப்பால்:
குழந்தைக்கு தினமும் தவறாமல் தாய்ப்பால் கொடுப்பது மிக முக்கியமாகும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது சுமார் 2000 முதல் 3000 கல்லூரிகள் வரை ஆற்றல் எரிக்கப்படுகிறது. அதிக கலோரிகள் எரிக்கப்படும் போது உடல் எடை கூடுவது தடுக்கப்படுகிறது.

உடற்பயிற்சி:
பிரசவத்திற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு தினமும் நடைப்பயிற்சி மற்றும் சிறு சிறு உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்யலாம். மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது. பகலில் உறங்குவதை தவிர்ப்பது உடல் எடை கூடுவதை தவிர்ப்பதற்கு உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 205

0

0