ஜீரணக்கோளாறு நெஞ்சுக்கரிப்பு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான எளிய வீட்டு வைத்தியம் இதோ

9 June 2021, 9:09 am
home remedies to treat acid indigestion
Quick Share

உடல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட்ட உணவுகளெல்லாம் செரிமானம் ஆக வேண்டியது அவசியம். ஆனால் கெட்ட பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகள் காரணமாக, நம்மில் பெரும்பாலோர் வயிறு வீக்கம், நெஞ்சுக்கரிப்பு மற்றும் வாய்வுத் தொல்லை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறோம். 

காலப்போக்கில், இந்த பிரச்சினைகள் மிகவும் கடுமையான சுகாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலும், நெஞ்செரிச்சல், வயிறு கோளாறால் உங்களின் இயல்பான வாழ்க்கை முறை பாதிக்கப்படும். எனவே, சரியான செரிமான அமைப்பை பராமரிப்பது முக்கியம். 

சில நேரங்களில், இது மிகவும் மோசமாகிவிடும், உங்களுக்கு மருத்துவ கவனிப்பும் கூட தேவைப்படும் நிலை ஏற்படலாம். எனவே செரிமான பிரச்சினை ஏற்படும்போது அதை சீராக்க சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றலாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இஞ்சி: இந்த இஞ்சி செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் குடலில் வாயு உருவாவதைத் தடுக்கிறது. ஒரு சிறு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். அளவோடு சாப்பிட்ட பிராகி இதைப் பருகினால் உங்களுக்கு செரிமானம் சீராக நடைபெறும்.

புதினா: இதில் மென்தால் உள்ளது, இது செரிமான நடைபெற உதவுகிறது. மென்தால் குளிரூட்டும் விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் நெஞ்செரிச்சலைக் குறைக்கும். இதை வழக்கமாக சூப்கள் மற்றும் சாலட்களில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

துளசி: இந்த மூலிகை குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது பசியை உண்டாக்கும் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும். டிஸ்பெப்சியா, வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுவதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.

இலவங்கப்பட்டை: இது அற்புதமான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது வீக்கம் மற்றும் வாய்வு பிரச்சினைகளைப் போக்கக்கூடியது.

ஏலக்காய்: இது செரிமானத்தை துரிதப்படுத்தி வயிற்று தசையை தளர்த்தும் தன்மை கொண்டது. இது செரிமான செயல்முறையை விரைவுபடுத்துகிறது மற்றும் வாய்வுத் தொல்லையைத் தடுக்கிறது. உணவுகளுடன் ஏலக்காயை சேர்த்துக்கொண்டால் செரிமான பிரச்ச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Views: - 213

0

0