வாயுத்தொல்லைனால ரொம்ப சங்கடமா இருக்கா… ஃபீல் பண்ணாம இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
8 June 2023, 6:44 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

நமது உடலில் உள்ள செரிமானம் ஆகாத உணவுப் பொருட்களில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் செல்லுளோஸ் ஆகியவற்றின் மூலம் உண்டாகும் பாக்டீரியாக்கள் நமது குடல் மற்றும் இரைப்பையில் காற்றை உருவாக்கி அதனை வாய் மற்றும் ஆசனவாய் மூலம் வெளியேற்றுகின்றன. இதுவே வாயு கோளாறு (gas trouble) எனப்படுகிறது.

இது உடல் உறுப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் நாள்பட்ட வாயு கோளாறு மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. நாம் எவ்வளவு சத்தான உணவு எடுத்துகொண்டாலும், நமது குடல் மற்றும் இரைப்பையில் தேங்கி இருக்கக்கூடிய வாயுவானது நாம் உண்ணும் உணவில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், நியூட்ரியன்ட்கள், கனிமச்சத்துக்கள் போன்றவற்றை நம் உடலில் சேராத வண்ணம் தடை செய்கிறது.

இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் சேரவில்லை எனில், நமது எலும்புகள், தசைகள் போன்றவற்றின் வளர்ச்சி தடைபடுகிறது. இரத்தத்திற்கு தேவையான சத்துக்கள் குறைகின்றன. எனவே தானாகவே நமது உடலில் ஆரோக்கியம் கெடுகிறது. எனவே இவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது.

வாயு தொல்லைக்கான அறிகுறிகள்:
*பசி இல்லாத உணர்வோடு மந்தமாகவும் சோர்வாகவும் இருப்பது.
*உணவு செரிமானம் ஆகாமல் இருப்பது.
*வெறும் வயிற்றில் இருக்கும் போது கூட வயிறு வீக்கம் போல் உணர்தல்.
*பசியுடன் இருக்கும் போது தொடர்ந்து ஏப்பம் வருவது.
*ஆசன வாய் வழியாக தொடர்ந்து வாயு வெளியேறுவது.
*காலையில் மலம் கழித்தாலும் அவை முழுமையாக வெளியேறாமல் மீண்டும் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுதல்.

வாயு தொல்லைக்கான காரணங்கள்:
*அவசர அவசரமாக உணவு உட்கொள்ளுதல்.

*உணவு உண்டவுடன் உறங்குவது.

*காலை உணவை தவிர்த்தல் அல்லது நேரம் தவறி உண்ணுதல்.

*பசி எடுக்கும் போதும் உணவு உண்ணாமல் டீ, காபி, ஸ்னாக்ஸ் போன்ற சிற்றுண்டிகளை உண்ணுவது.

*உணவு பொருள்களில் அதிகமான மசாலா, காரம் சேர்த்துக் கொள்வது.

*சிலர் புரதச்சத்து இருக்கிறது என்று பட்டாணி, மொச்சை, கொண்டை கடலை, உருளைக்கிழங்கு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உண்பது. இதுவும் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும்.

*இரவு நேரங்களில் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடுவது.

வாயுத் தொல்லையை சரி செய்யும் ஒரு சில வழிகள்:
முடிந்தவரை மேலே கூறப்பட்டுள்ள வாயுத்தொல்லையை ஏற்படுத்தும் விஷயங்களை தொடர்ந்து செய்யாதீர்கள்.
அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 5 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

டீ மற்றும் காபியில் சோம்பு, புதினா மற்றும் சுக்கு போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.
இரவில் சோம்பு (பெருஞ்சீரகம்) ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 321

0

0