வயிற்று வலியை போக்கும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
24 May 2023, 4:45 pm
Quick Share

அதிகப்படியான உணவு, அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வது மற்றும் பருவகால மாற்றம் ஆகியவை உங்கள் வயிற்று வலியை ஏற்படுத்தலாம். உணவில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் இருப்பதாலும், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இந்த வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் சில வீட்டு வைத்தியங்களை இப்போது பார்க்கலாம்.

லெமன் டீ வயிற்று வலி மற்றும் அஜீரணத்தைப் போக்க சிறந்த வழி. இது பொதுவாக எடை இழப்பு மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்க உட்கொள்ளப்படுகிறது என்றாலும், வயிற்று நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. துளசி இலைகள், எலுமிச்சை மற்றும் ஓமம் விதைகளை தண்ணீரில் சேர்த்து காய்ச்சினால் ஆரோக்கியமான மற்றும் சுவையான லெமன் டீ தயார்.

இஞ்சி மிகவும் பயனுள்ள வலி நிவாரணி மற்றும் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாதது. இரண்டு கப் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் தேன் மற்றும் கருப்பு மிளகு சேர்த்தால் உங்கள் இஞ்சி தேநீர் பரிமாற தயாராக உள்ளது. இது வயிற்றில் வலியை தணிக்கவும், குமட்டல் மற்றும் வீக்கத்தை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

வயிற்றுவலி மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க தயிர் சிறந்தது. குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானம் என்று வரும்போது உணவுப் பொருள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் புதிய தயிர் எடுத்து, ஒரு டீஸ்பூன் அரைத்த சீரகப் பொடியுடன் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடவும்.

பெருஞ்சீரகம் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வயிற்று நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. பெருஞ்சீரகத்தில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. ஒரு கப் தண்ணீரை எடுத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். துளசி இலைகளுடன் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்க்கவும். இதனை வெதுவெதுப்பாக பருகவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 338

0

0