எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்கினால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்?
Author: Hemalatha Ramkumar13 August 2021, 11:42 am
ஒவ்வொரு வயதினருக்கும் தேவையான தூக்கத்தின் அளவு பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் வயது ஒரு முக்கிய காரணி. வயது வித்தியாசத்தின் அடிப்படையில் அவரவர்களுக்கு தேவையான தூக்கத்தில் அளவும் வித்தியாசப்படும். சரி, எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை முதலில் அறிந்துக்கொள்ளுங்கள்:
வயது வரம்பு | பரிந்துரைக்கப்பட்ட தூக்க அளவு |
4 மாதங்கள் முதல் 12 மாத குழந்தைகள் | 24 மணி நேரத்திற்கு 12 to 16 மணி நேரம் |
1 to 2 வயது குழந்தைகள் | 24 மணி நேரத்திற்கு 11 to 14 மணி நேரம் |
3 to 5 வயதினர் | 24 மணி நேரத்திற்கு 10 to 13 மணி நேரம் |
6 to 12 வயதினர் | 24 மணி நேரத்திற்கு 9 to 12 மணி நேரம் |
13 to 18 வயதினர் | 24 மணி நேரத்திற்கு 8 to 10 மணி நேரம் |
18 வயதுக்கு மேற்பட்டோர் | இரவில் மட்டுமே குறைந்தது 7 நேரம் தூங்க வேண்டும் |
நம் உடல் சீராக செயல்பட, ஒவ்வொரு வயதினரும் மேற்சொன்ன அளவிலான தூக்கத்தைப் பெறுவது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் தூங்கும் சமயத்தில் தான், நம் உடல் ஆற்றலை மீட்டமைத்துக்கொள்ளும். அதுவும் குழந்தைகள் நன்றாக தூங்கினால் தான் அவர்கள் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். எந்தவொரு உடல்நல குறைபாடுகளும் எளிதில் ஏற்படாமல் இருக்கும்.
Views: - 438
0
0