ராஜ்மா, கொண்டைக்கடலை சாப்பிடும் போது வாயு தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்???

Author: Hemalatha Ramkumar
4 June 2023, 5:07 pm
Quick Share

Images are © copyright to the authorized owner.

Quick Share

ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை பெரும்பாலும் வட இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இரண்டு பிரதான உணவுகள். கொண்டைக்கடலை அல்லது ராஜ்மா சாப்பிட்ட பிறகு ஒரு சிலர் மோசமான வயிற்று வலி அல்லது குமட்டலை அனுபவித்திருக்கலாம். ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை சாப்பிடுவது ஏன் வாயுப் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை புரதச்சத்து நிறைந்த உணவுகள். அதுமட்டுமின்றி, அவை உணவு நார்ச்சத்து, வைட்டமின் பி 9, ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும்.

நார்ச்சத்து, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், மாவுச்சத்து மற்றும் புரதங்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் காரணமாக, ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதுவே ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை சாப்பிடும் போது வாயுவை உண்டாக்குவதற்கான காரணம். ஆகவே, இதனை ஜீரணிக்க எளிதாக்குவதற்கான வழிகளை நாம் இப்போது பார்ப்போம்.

ராஜ்மா பீன்ஸை 4-6 மணி நேரம் ஊறவைத்து, நுரைத்து வரும் தண்ணீரை வடிகட்டி விடவும். மீண்டும் மீண்டும் நுரை ஏற்பட்டால் தண்ணீரை மாற்றவும். நீங்கள் ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை ரெசிபிகளை செய்யும் போது பெருங்காயம், ஓமம், மற்றும் பெருஞ்சீரகம் விதைகள் ஆகியவற்றை சேர்ப்பது பலன் அளிக்கும். மேலும் அவற்றை சிறிய அளவில் சேர்ப்பது செரிமானத்தை எளிதாக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 480

0

0