முன்னெச்சரிக்கை பதிவு: “உணவகங்களில் கவனம் அவசியம்” | இப்படியும் தொற்று பரவலாம்

8 July 2021, 5:21 pm
how to be safe in hotels during covid
Quick Share

கொரோனா காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததை அடுத்து உணவகங்கள் முதல் வழிபாட்டுத் தளங்கள் வரை பலவும் முடங்கியே இருந்தன. இப்பொது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதை அடுத்து உணவகங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.

முன்னதாக பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அடுத்தகட்ட தளர்வில் போக்குவரத்து சேவை உட்பட பல சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் அரசாங்கம் தன்னால் இயன்ற வரை அனைத்து முயற்சிகளையும் எடுத்து தொற்று பரவுதல் விகிதத்தைக் குறைத்துள்ளது. இந்த சமயத்தில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாம் தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உணவகங்களுக்குச் செல்லும்போது முதலில் ஹோட்டல் மெனு கார்டை வாங்கி உங்களுக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்துவிட்டுக் கையைச் சோப்பு அல்லது சானிடைசர் போட்டுக் கழுவிக்கொள்ளுங்கள். நிறைய நபர்கள் மெனு கார்டு பயன்படுத்துவதால் முன்னெச்சரிக்கை உடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

உணவகங்கள் மட்டுமல்ல மேலும் வேறு எந்த பொது இடங்களுக்கு சென்றாலும் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து சுகாதாரத்தை பேணவும் அறிவுறுத்தப்படுகிறது.

Views: - 108

0

1