ஆரோக்கியம்

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க எந்தெந்த சமையல் எண்ணெய்களை பயன்படுத்தலாம்…???

கண்மூடித்தனமாக சமையல் எண்ணெய்களை தேர்வு செய்வது உங்களுடைய இதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் அதிகப்படியான சாச்சுரேட்டட் கொழுப்புகள் அல்லது டிரான்ஸ் ஃபேட் உள்ளன. இவை நம்முடைய உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து இதய நோய்களை ஏற்படுத்தலாம். உங்களுடைய இதயத்தை பாதுகாப்பதற்கு சரியான சமையல் எண்ணெயை தேர்வு செய்வது அவசியம். நீங்கள் தேர்வு செய்யும் சமையல் எண்ணெயில் மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்க வேண்டும். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில் உங்கள் இதயத்திற்கு பலமளிக்கும் சமையல் எண்ணெய்களின் பட்டியலை இப்பொழுது பார்க்கலாம். 

சூரியகாந்தி எண்ணெய்

இதய நோயாளிகளுக்கு இது சிறந்த எண்ணெயாக கருதப்படுகிறது. இந்த எண்ணெய் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் Eயை கொண்டுள்ளது. இது இதய ஆரோக்கியம், நல்ல செரிமானம் மற்றும் சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. 

ஆலிவ் எண்ணெய்

இதயத்திற்கு ஆரோக்கியமாக கருதப்படும் இந்த எண்ணெய் பொரிக்க, வறுக்க மற்றும் பேக்கிங் போன்றவற்றிற்கு ஏற்ற எண்ணெயாக அமைகிறது. அதிக அளவு வெப்ப நிலையில் சமைக்கப்பட்டாலும் இதில் உள்ள ஃப்ளேவர் அல்லது ஊட்டச்சத்து மாறாது. இந்த எண்ணெயில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடி ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் உதவுகிறது. 

இதையும் படிக்கலாமே: குளிர் காலத்திற்கு ஏற்ற மேக்கப் டிப்ஸ்!!!

கடலை எண்ணெய்

இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படும் இந்த எண்ணெய் எந்த ஒரு உணவையும் சமைப்பதற்கு ஏற்றதாக அமைகிறது. இதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் இதயத்தின் ஆரோக்கியத்தையும், கொலஸ்ட்ரால் அளவுகளையும் பராமரிக்கிறது. 

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் 

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் என்பது இதயத்திற்கு ஆரோக்கியமான ஒரு சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. இந்த எண்ணெய் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து அதே நேரத்தில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. ஆன்டி- ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த எண்ணெய் ஃப்ரீ ரேடிக்கில்கள் காரணமாக ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்குகிறது. மேலும் இந்த எண்ணெய் ஆன்டி-ஏஜிங் விளைவுகளைக் கொண்டுள்ளதால் நமக்கு இளமையான சருமத்தையும் அளிக்கிறது. இதில் எந்தவிதமான ட்ரான்ஸ் ஃபேட் கிடையாது மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பும் மிக குறைவான அளவில் உள்ளது. 

சிறந்த சமையல் எண்ணெய்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

சரியான சமையல் எண்ணெயை தேர்ந்தெடுப்பது என்பது நீங்கள் சமைக்கும் முறையை பொருத்தும், உங்களுடைய ஆரோக்கிய இலக்குகள் மற்றும் எண்ணெயின் ஊட்டச்சத்துக்களை பொருத்தும் அமையும். உதாரணமாக பொரித்தெடுக்க அல்லது கிரில் செய்ய அதிக புகை புள்ளி கொண்ட அவகாடோ எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்கள் அதிகப்படியான வெப்ப நிலைகளில் கூட உடையாமல் அப்படியே இருக்கும். இதயத்தின் ஆரோக்கியத்திற்கு  மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த ஆலிவ் எண்ணெய் கனோலா எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். எண்ணெயீகள் மூலமாக அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு சுத்திகரிக்கப்படாத மரசைக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவது அவசியம். அதுமட்டுமல்லாமல் டிரான்ஸ் ஃபேட் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் அதிகமாக உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…

வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…

20 minutes ago

படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!

பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…

33 minutes ago

6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்

தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி  விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…

1 hour ago

நீ நடிகனாக இருக்கவே லாயக்கி இல்ல.. யோகி பாபுவை மேடையில் விட்டு விளாசிய தயாரிப்பாளர்!

விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…

2 hours ago

ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…

2 hours ago

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

16 hours ago

This website uses cookies.