காசு பணம் செலவழிக்க வேண்டாம்… இத மட்டும் செய்தாலே நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி விடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
20 May 2023, 1:12 pm
Quick Share

நாம் குழந்தையாக இருக்கும் பொழுது, நம் பெற்றோர் உணவை நன்குமென்று சாப்பிட வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறியது நம் எல்லோருக்குமே நிச்சயமாக நினைவில் இருக்கும்.

உணவை நன்றாக மென்று சாப்பிடுவது செரிமானத்தின் போது உணவை சிறிய துண்டுகளாக உடைக்க உதவுகிறது. இது செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், உணவு தொண்டையில் சிக்கிக்கொள்வதை தடுக்கவும் உதவும்.

ஆனால் நாம் உணவை மென்று சாப்பிடுவதற்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவை நன்றாக மென்று சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை முற்றிலும் குறைக்க உதவும். உணவை நன்றாக மென்று சாப்பிவதற்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வது, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நமது உணவில் சர்க்கரையின் முக்கிய ஆதாரமாக உள்ள கார்போஹைட்ரேட்டுகள், உணவை சிறிய துண்டுகளாக உடைக்கவும், உடல் சர்க்கரையை உறிஞ்சும் விகிதத்தைக் குறைக்கவும் உதவும். இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது.

உணவை சிறிய துண்டுகளாக உடைப்பதைத் தவிர, நன்றாக மென்று சாப்பிடுவது போதுமான அளவு உமிழ்நீரை உடலில் சுரக்க ஊக்குவிக்கிறது. இது உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மாவுச்சத்தை உடைக்க உதவுகிறது.

உணவை மேலும் உடைக்கக்கூடிய நொதிகள் உமிழ்நீரில் உள்ளன. இதனால் உடல் ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சிவிடும். இது சாப்பிட்ட பிறகு ஏற்படும் இரத்த சர்க்கரை அதிகரிப்பை குறைக்க உதவுகிறது.

மேலும், உணவை நன்றாக மெல்லுதல் நம்மை நீண்ட நேரம் முழுதாக உணர உதவும். உணவை கூழாக மென்று சாப்பிடுவது, வயிறு நிரம்பியிருப்பதை மூளைக்குச் சொல்லும் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது. இது அதிகப்படியான உணவு சாப்பிடுவதை குறைக்க உதவுகிறது.

எப்பொழுதும் சிறிய அளவிலான உணவை எடுத்து மெதுவாகவும் முழுமையாகவும் மென்று சாப்பிடுங்கள். இது உங்கள் உமிழ்நீரை உணவுடன் கலக்க நேரம் கொடுக்கிறது, இது எளிதாக செரிமானத்திற்கு அதை உடைக்க உதவுகிறது. கூடுதலாக, விழுங்குவதற்கு முன் ஒவ்வொரு வாய் உணவையும் குறைந்தது 30 முறை மெல்ல முயற்சிக்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 262

0

0