கண்கட்டி உங்களை பாடாய் படுத்துகிறதா? ஒரே இரவில் தீர்வு பெற கொஞ்சம் இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! Stye eye home remedy

9 July 2021, 6:07 pm
stye eye home remedy
Quick Share

இந்த காலத்து ஆட்கள்  பலருக்கு நாமக்கட்டி பற்றி தெரிய வாய்ப்பில்லை. முன்பெல்லாம் அனைவரது வீட்டிலும் எப்போதும் நாமக்கட்டி இருக்கும். இது பார்ப்பதற்கு சாக்பீஸ் போல இருக்கும். ஆனால் வழக்கமான சாக்பீஸை விட இது மிகவும் கடினமாக இருக்கும். ஒரு வித கலிமண்ணால் ஆனது தான் நாமக்கட்டி. நெற்றியில் திலகமிட இந்தியாவில் இதனை பயன்படுத்தி வருகின்றனர். 

வழிபாடு நேரத்தில் நாமக்கட்டியை கொண்டு தான் நாமம் வரையப்படும். நாமம் என்பது விஷ்ணு கடவுளுக்கு உகந்த ஒரு வடிவம். இதனை பெண்கள் இட்டு கொள்ள மாட்டார்கள். நாமம் இட்டு கொள்வதன் மூலம் தன்னை முழுவதுமாக கடவுளிடம் அற்பணித்து கொள்கிறேன் என்று அர்த்தம். ஒவ்வொரு முறை நெற்றியில் நாமம் இடும் போதும் இந்த விஷயம் நினைவிற்கு வரும்.  

மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் மருத்துவ ரீதியாக கண்களில் ஏற்படும் கட்டிகளை போக்க கூடிய தன்மை இதற்கு உண்டு. இதனை கண்கட்டி என்று சொல்வோம். பெரும்பாலும் இந்த கண்கட்டியானது கோடை காலத்தில் தான் ஏற்படும். இந்த கட்டியானது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி பாதி கண்களையே மறைத்து விடும். 

கட்டி பெரிதாக ஆக வலியும் அதிகரிக்கும். அதில் இருந்து சீழ் வெளிவர ஆரம்பிக்கும். கட்டி வர ஆரம்பித்த உடனே விரலை சூடு பறக்க தேய்த்து கட்டி வர இருக்கும் இடத்தில் வைத்து வர கட்டி பெரிதாகாமல் அப்படியே அமுங்கி விடும். கட்டி பெரிதாகி விட்டால் மஞ்சளை சோப்பில் கரைத்து கட்டி மீது தடவி வர கட்டி உடைந்து அதிலிருந்து சீழ் வெளியேறி படிப்படியாக ஆறி விடும். ஆனால் இது வலியை உண்டாக்கும். எனவே இதனை செய்வதற்கு ஒரு சிலர் பயப்படுவார்கள். 

இன்று நாம் பார்க்க இருக்கும் நாமக்கட்டி மருத்துவம் இது போன்ற எந்த வலியையும் ஏற்படுத்தாது. இதனை செய்வதற்கு நமக்கு நாமக்கட்டி மற்றும் ஒரு சந்தன கல் தேவை. முதலில் சந்தன கல்லை சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு சிறிய அளவு நாமக்கட்டி எடுத்து சந்தன கல்லில் சிறிதளவு தண்ணீர் விட்டு  தேய்க்க ஆரம்பியுங்கள். 

மிக எளிதில் நாமகட்டி பேஸ்ட் போல ஆகி விடும். இந்த பேஸ்டை கண்கட்டி மீது தடவி கொள்ளுங்கள். இதை தடவியதால் வலியோ எரிச்சலோ உண்டாகாது. குளுமையாக கண்களுக்கு இதமாக இருக்கும். எனவே எந்த வித பயமும் இல்லாமல் இதனை முயற்சி செய்து பார்க்கலாம். நாமகட்டி கெட்டு போகாத காரணத்தால் அதனை வருட கணக்கில் கூட சேகரித்து வைத்து கொள்ளலாம்.

Views: - 423

0

0