கண்கட்டி எதனால் ஏற்படுகிறது? இதற்கு என்ன தீர்வு? டாக்டரிடம் போகாமலேயே இதை சரிசெய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ் உங்களுக்காக இதோ

Author: Hemalatha Ramkumar
28 August 2021, 11:18 am
how to get rid of stye on eyelid
Quick Share

கண் கட்டி பிரச்சினை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இந்த கண்கட்டி ஏற்பட்டால், தாங்கமுடியாத வலி உண்டாகும். வலியோடு வெளியில் செல்வது, ஏதேனும் செயலை செய்வது என்பதெல்லாம் மிகவும் கடினமாக இருக்கும். இந்த கண்கட்டி, மேல் அல்லது கீழ் கண் இமைகளின் விளிம்பில் உண்டாகக்கூடும்.  இது பார்க்க ஒரு பரு அல்லது சிறிய கொப்புளம் போல தோன்ற ஆரம்பிக்கும். ஆரம்பத்திலேயே அஜாக்கிரதையாக விட்டுவிட்டால், இந்த கண் கட்டி தீவிரமாக பெரிதாகி சீழ் பிடித்துவிடும். இது கண் இமைகளில் எண்ணெய் சுரப்பிகளின் தொற்று காரணமாக ஏற்படுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கண் இமைக்கு வெளியே கண் கட்டி ஏற்படக்கூடும். ஆனால் சில சமயங்களில், இது கண் இமைகளின் உள் பகுதியில் கண்கட்டி உண்டாகும். ஆனால், இது சில நாட்களில் தானாகவே மறைந்துவிடும். ஆனால் இதனால் ஏற்படும் வலி மற்றும் அவுகரியத்தைக் குறைக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்கலாம். கண்ணிமை மீது சூடான துணியால் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலி மற்றும் அசௌகரியத்திலிருந்து நிவாரணம் பெற முடியும்.

ஸ்டஃபைளோகாகஸ் எஸ்.பி. பாக்டீரியம் எனும் தொற்று தான் பொதுவாக கண் கட்டி நோய்த்தொற்றுக்கு மிக முக்கிய காரணமாகிறது. சாதாரண நிலைகளில், அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால், பாக்டீரியாவின் அதிகப்படியான உற்பத்தி கண் இமைகளில் ஒரு வலி மற்றும் வீக்கத்தை உருவாக்குகிறது. இது பொதுவாக பாதிப்பில்லாதது மற்றும் கண்பார்வையைப் பாதிக்காது.

இருப்பினும், அரிதான சந்தர்ப்பங்களில் இது செல்லுலிடிஸ் எனும் கடுமையான தொற்றுநோயை முகத்தில் ஏற்படுத்தக்கூடும். நீரிழிவு நோய், சில தோல் நிலைகள், சுகாதாரமின்மை, சுத்தமின்மை மற்றும் சுத்தமில்லாத பழைய பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவை கண் கட்டியை ஏற்படுத்துவதற்கான ஆபத்து காரணிகள் ஆகும்.

அறிகுறிகள்:

கண்ணிமை மீது, ஒரு பரு போன்ற சீழ் நிறைந்த சிவப்பு கட்டி

கண் இமைகளில் வலி

கண்ணில் வீக்கம்

நீர் கலந்த கண்கள்

தீர்வுகள் 

ஆண்டிபயாடிக் ஆயின்மென்ட் அறிகுறிகளை அகற்றும். இருப்பினும், சரியான சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் நீங்கள் இதை வராமல் தடுக்க முடியும்.

சூடான துணி, டீ-பேக் போன்றவற்றுடன் இதமாக ஒத்தடம் கொடுப்பதன் மூலம் அல்லது சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் இந்த நிலையை குணப்படுத்த முடியும்.

நாமக்கட்டி மருத்துவம் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. நமக்கட்டியை கண்கட்டி ஏற்பட்ட இடத்தில் பயன்படுத்துவதனால் எந்த வலியும் ஏற்டாது. இதனை செய்வதற்கு நாமக்கட்டி மற்றும் ஒரு சந்தன கல் வேண்டும். முதலில் சந்தன கல்லை சுத்தம் செய்து ஒரு சிறிய அளவு நாமக்கட்டி எடுத்து சந்தன கல்லில் சிறிதளவு தண்ணீர் விட்டு தேய்க்க ஆரம்பியுங்கள்.

மிக எளிதில் நாமகட்டி பேஸ்ட் போல ஆகி விடும். இந்த பேஸ்டை கண்கட்டி மீது தடவி கொள்ளுங்கள். இதை தடவக்கொண்டால் வலியோ எரிச்சலோ உண்டாகாது. குளுமையாக கண்களுக்கு இதமாக இருக்கும். எனவே எந்த வித பயமும் இல்லாமல் இதனை முயற்சி செய்து பார்க்கலாம். நாமகட்டி கெட்டு போகாது எனும் காரணத்தால் முன்னெச்சரிக்கையாக தேவைக்கு அதிகமாகவே அதை வாங்கி வீட்டில் பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.

Views: - 583

0

0