பொடுகு தொல்லை இருப்பவர்கள் என்ன செய்தால் இந்த பிரச்சினை சரியாகும்?

29 May 2021, 8:44 am
how to get rid of dandruff
Quick Share

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு, மாறி வரும் உணவு பழக்கங்களில் வாழ்க்கை முறைகள், செயற்கை முறையில் தயார் செய்யப்படும் ஷேம்பூ க்கள் என பலவற்றால் ஆண்கள், பெண்கள் என எல்லோருக்குமே இந்த பொடுகு  தொல்லை என்பது தீரா பிரச்சினையாக இருந்து வருகிறது.  

எல்லா விதமான ஷேம்பூ, ஹேர் கண்டிஷனர் எல்லாமே பயன்படுத்தி விட்டேன் ஆனாலும் இந்த பொடுகு பிரச்சினை குறைந்த பாடில்லை என்று பலரும் புலம்ப கேட்டிருப்போம். ஏன் நமக்கே கூட இந்த பிரச்சினை இருக்கலாம். ஆனால் அதற்கு இயற்கை முறையிலேயே தீர்வு உண்டு. அதை பற்றியும் அதற்கான சில டிப்ஸ் பற்றியும் தான் தெரிந்துக்கொள்ளபோகிறோம்.

நம்ம ஊரின் சாலையோரங்களிலேயே கிடைக்கும் அற்புதமான இயற்கை மூலிகை தான் வேப்பிலை. இந்த வேம்பு இலைகளை பறித்து நன்கு மைய அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உலர விட்டு குளித்தாலே முடியின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.  இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தவறாமல் செய்து வர உங்கள் முடியின் ஆரோக்கியன் சீராக இருக்கும். 

அதே போல வழக்கமாக சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தாலே முடியின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தேங்காய் எண்ணெயும் பூண்டும் பொடுகை பிரச்சினையை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இளஞ்சூட்டில் தேங்காய் எண்ணெயைக் காய வைத்து ஒன்று அல்லது இரண்டு பூண்டு பல் சேர்த்து சூடேற்றி இறக்கிவிடவும். நன்கு சூடு இறங்கிய பின்பு உச்சந்தலையில்  நன்கு படும்வரை தேய்க்க சீக்கிரமே பொடுகு பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்வதும்  நல்ல பலன் கொடுக்கும். கறிவேப்பிலை சட்னி கூட வாரத்திற்கு ஒரு முறை செய்து சாப்பிடலாம். கறிவேப்பிலை முடிக்கு நல்ல  அடர்த்தியும் பொலிவையும் கொடுக்கும்.

வெங்காயச் சாற்றை பிழிந்தெடுத்து வேர்கால்களில் நன்கு படும்படி தேய்க்க பொடுகு தொல்லை நீங்கும்.

ஈரமாக இருக்கும் துணியில் தலையைத் துவட்டுவதை தவிர்க்க வேண்டும். ஈரத்தலையோடு படுக்கைக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

அதே போல வெந்தையத்தையும் பொடுகு பிரச்சினை நீங்க பயன்படுத்தலாம். வெந்தயத்தை நீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த காலையில் அந்நீரோடு வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்தால் பொடுகு பிரச்சினைப் பறந்தே போகும். 

Views: - 212

0

0