ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கும்போது அதிகமா சாப்பிடுவீங்களா… அத  ஈஸியா கண்ட்ரோல் பண்ண சில வழிகள் இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
28 November 2024, 7:27 pm

ஸ்ட்ரெஸ் ஈட்டிங் அல்லது எமோஷனல் ஈட்டிங் என்று அழைக்கப்படும் மன அழுத்தத்தின் போது அதிகமாக சாப்பிடுவது மன அழுத்தத்தின் ஒரு எதிர்வினையாக கருதப்படுகிறது. மன அழுத்தத்தை அனுபவிக்கும் பொழுது நம்முடைய உடல் கார்ட்டிசால் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன் பசியை அதிகரித்து, ஒரு சில உணவுகளை சாப்பிடுவதற்கான ஆசையை தூண்டுகிறது. இதனால் சில நபர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது அதிக கலோரி, அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு தற்காலிக நிவாரணம் பெறுகிறார்கள். மேலும் மன அழுத்தம் ஒருவருடைய மனநிலையை பாதித்து ஆரோக்கியமற்ற உணவு சாப்பிடும் பழக்கத்தை கற்றுக் கொள்கின்றனர். இதன் விளைவாக ஸ்ட்ரெஸ் ஈட்டிங் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. ஆகவே நீங்கள் மன அழுத்தமாக இருக்கும் பொழுது அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு உதவும் சில வழிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

போதுமான அளவு நீர்ச்சத்து 

உங்கள் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தாலே ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கான உங்களுடைய ஆசை குறையும். மேலும் கார்டிசால் அளவுகளும் குறையும். உங்கள் உடலில் சிறிதளவு டீ-ஹைட்ரேஷன் இருந்தால் கூட அதனால் பசியும், பதட்டமும் அதிகமாகலாம். மேலும் இதனால் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்களுடைய கவனிப்பு திறனை அதிகரித்து மனதை அமைதியாக வைக்கும். 

ஆக்டிவாக இருங்கள்

வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தின் போது என்டார்ஃபின் என்ற ஹார்மோன் உற்பத்தியை தூண்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை குறைக்கிறது. என்டார்ஃபின்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் உடற்பயிற்சி செய்வது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு ஆசைப்பட மாட்டீர்கள். 

இதையும் படிக்கலாமே: உங்க குளிர்கால டயட்ல இந்த ஒரு பொருள் இருந்தாலே எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிவிடும்!!!

ஆழ்ந்த மூச்சு பயிற்சி 

ஆழ்ந்த மூச்சு பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும். இது உங்களுடைய இதயத்துடிப்பின் விகிதத்தை குறைத்து, கார்ட்டிசால் அளவுகளை குறைக்கும். மேலும் இதனால் ஒரு சில ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதற்கான ஆசை குறையும். 

பிளாக் டீ 

பிளாக் டீ என்பது உங்களை ரிலாக்ஸாக இருக்கச் செய்து மன அழுத்தத்தின்போது சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு உதவுகிறது. பிளாக் டீயில் காணப்படும் அமினோ அமில L-தியானைன் பசியை சீராக்கி மனநிலையை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவீர்கள். 

அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு 

அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மன அழுத்தத்தின்போது அதிகமாக சாப்பிடுவதை தடுத்து, உங்களுடைய ரத்த சர்க்கரையை சீராக்கி, வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். பழங்கள், காய்கறிகள், மெலித்த புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. இது நம்முடைய உடல் மற்றும் மன நலனை கவனித்துக் கொள்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Bhuvaneshwari spiritual journey திடீரென ஆன்மிகத்தில் குதித்த கவர்ச்சி நடிகை : இதெல்லாம் ரொம்ப தப்புமா..கவலையில் ரசிகர்கள்..!
  • Views: - 87

    0

    0

    Leave a Reply