இயற்கையாக விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி? சில ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் இதோ

23 June 2021, 5:05 pm
How to increase sperm count naturally
Quick Share

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தாலும், உங்கள் பாலியல் வாழ்க்கையில் உங்களுக்கு திருப்தி இல்லையா? உங்கள் ஆண்குறியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பிக்கவும் நீங்கள் சில உணவு முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். 

How to increase sperm count naturally

அதற்கு நீங்கள் இயற்கையாக கிடைக்கும் சில உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆண்குறியின் செயல்திறனில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். 

அதே சமயம், நீங்கள் குழந்தைப்பேறு பெற ஆசைக் கொண்டால், முதலில் உங்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். விந்தணுக்களின் எண்ணிக்கை சீராக இருந்தால் தான் குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். கருமுட்டையுடன் இணைந்து குழந்தையை உருவாக்க விந்தணுக்கள் மிகவும் அவசியம். விந்தணுக்கள் என்று சொல்லக்கூடிய இந்த ஆண் இனப்பெருக்க செல்கள் மரபணு தகவல்களை கடத்திச் செல்லும். 

எனவே, ஆரோக்கியமான குழந்தையைப் பெற உங்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும் எண்ணிக்கையையும் மேம்படுத்த நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. வாழைப்பழம்

How to increase sperm count naturally

வாழைப்பழம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் B1, வைட்டமின் C மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களை நிறைந்த, வாழைப்பழங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் இயக்கத்தையும் மேம்படுத்துகின்றன. இந்த பழத்தில் பாலியல் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் அரிய நொதியான ப்ரோமிலியாட் உள்ளது. இதனால் உங்கள் பாலியல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

2. டார்க் சாக்லேட்

How to increase sperm count naturally

உங்கள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க டார்க் சாக்லேட் மிகவும் சிறந்தது. இதில் L-அர்ஜினைன் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது விந்தணுக்களின் அளவை மேம்படுத்துவதோடு உங்கள் புணர்ச்சியையும் மேம்படுத்தும். டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் அதிகமாக இதை சாப்பிட வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

3. கீரைகள்

How to increase sperm count naturally

உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் உணவோடு தவறாமல் பச்சை இலை காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக கீரைகளில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது, இது விந்தணுக்களுக்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது ஆரோக்கியமான விந்து உற்பத்திக்கு உதவும். ஃபோலிக் அமிலத்தின் அளவு குறைந்தால் விந்தணுக்கள் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் குறையக்கூடும். எனவே உங்கள் உணவில் கீரை வகைகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

4. முட்டை

How to increase sperm count naturally

வைட்டமின் E மற்றும் புரதச்சத்து நிறைந்த, முட்டைகள் ஆரோக்கியமான விந்தணுக்களை உருவாக்க உதவுகின்றன மற்றும் அவற்றின் இயக்கத்தை மேம்படுத்துகின்றன. முட்டை விந்தணுக்களை ஃப்ரீ ரேடிகல்களிலிருந்து பாதுகாக்கிறது. அது மட்டுமல்லாமல் வலுவான மற்றும் ஆரோக்கியமான விந்தணுக்கள் கருமுட்டையைச் சேருவதற்கான வாய்ப்புகளை இது அதிகரிக்கும்.

How to increase sperm count naturally

5. சிப்பி

How to increase sperm count naturally

சிப்பிகள் உங்கள் விந்தணுக்களை அதிகரிக்கும் ஓரு சிறந்த உணவு. இதில் அத்தியாவசிய துத்தநாகம் அதிக அளவில் உள்ளது, இது ஆரோக்கியமான விந்து மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்துவதற்கு முக்கியமானது. சிப்பிகள் சாப்பிடுவது நிச்சயமாக உங்கள் உடலுறவு வாழ்க்கையை மேம்படுத்தும்.

6. கோஜி பலம்

How to increase sperm count naturally

ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கையை சாதாரண வரம்பை விட அதிகரிக்கும் திறன் கொண்டது இந்த கோஜி பழங்கள். கோஜி பழங்கள் உங்கள் மனநிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விந்தணுக்களின் உற்பத்திக்கு ஏற்ற வெப்பநிலையில் உடலை வைத்திருக்கும். இது விந்தணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும். 

7. பூண்டு

How to increase sperm count naturally

பூண்டு ஒரு மிகச்சிறந்த இயற்கை உணவு ஆகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்திக்கு முக்கியமாக செலினியம் மற்றும் வைட்டமின் B6 ஆகியவை இதில் அதிக அளவில் உள்ளது. இது விந்தணுக்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

8. வாதுமை கொட்டை (அ) வால்நட்ஸ்

How to increase sperm count naturally

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் 2012 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆண்கள் தினமும் 75 கிராம் வால்நட்ஸ் உட்கொள்வது அவர்களின் விந்தணுக்களின் உருவவியல், இயக்கம் மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்தும். அதோடு இதில் L-அர்ஜினைன் சிறந்து விளங்குவதால், வால்நட்ஸ் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

9. தண்ணீர் விட்டான் கொடி (அ) ஆஸ்பாரகஸ்

How to increase sperm count naturally

வைட்டமின் C அதிகம் உள்ள ஆஸ்பாரகஸ் ஒரு காய்கறி வகையைச் சார்ந்தது இது விந்தணுக்களின் அளவை அதிகரிக்கும். இதிலிருக்கும் வைட்டமின் C ஆனது ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடி உங்கள் விந்தணுவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

10. மாதுளை

How to increase sperm count naturally

உங்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் சாப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான உணவு மாதுளை. இந்த பழம் விந்து தரம் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுவதன் மூலம் உங்கள் விந்தணுக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க மாதுளை சாறு குடிக்கலாம்.

Views: - 529

1

0