உடல் எடையை குறைக்க வேண்டுமா? உங்களுக்கான 10 சிம்பிள் டிப்ஸ்!

26 March 2020, 8:24 pm
weight loss tips updatenews360
Quick Share

உலகில்   உடல் பருமனால்   கஷ்டப்படுபவர்கள் ஏராளமானோர். முக்கியமாக   இளம் வயதிலே எடை அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோருக்கு   மற்றவர்களிடம் சகஜமாக பழகவே கஷ்டப்படுவார்கள்.

இதற்கு   முக்கிய காரணம்  சரியான உடற்பயிற்சி   மேற்கொள்ளாதது மற்றும் தவறான   உணவு பழக்கம் ஆகியவை தான். முக்கியமாக   நீங்கள் உண்ணும் உணவில் மாற்றத்தை கொண்டு  வந்தாலே போதும், உங்கள் உடல் எடை சரியாகவும், உடல்   கட்டுக்கோப்பாகவும் இருக்கும். அதற்காக நீங்கள் அன்றாடம்   உண்ணும் உணவில் சிறிய மாற்றங்களை கொண்டு வந்தால் போதுமானது.  இதனால் உடல் எடையும் குறைந்துவிடும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.  சரி அதற்கான உணவு டயட் என்னவென்று இதில் காண்போம்.

weight loss tips updatenews360

1.  எண்ணெயில்  பொரித்த ஸ்னாக்ஸ்   அதிகமாக உண்பதை கட்டாயமாக   தவிர்த்து விடுவது நல்லதாகும்.  இவை உங்களுக்கு எடையை அதிகரிப்பது  மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் சீரழிக்க  செய்யும். அதற்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ், ஸ்மூத்திகள், ஃபுரூட் சாலட்  போன்றவற்றை உண்பது உடலுக்கு நன்மையை தரும் வகையில் இருக்கும்.

2.  காலையில்   எழுந்தது முதல்   இரவு தூங்கும் வரை   குடிக்கும் நீரை அதிகப்படுத்துதல்  அவசியமாகும். குறிப்பாக ஒரு நாளைக்கு  2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீரை   குடிப்பது அவசியமாகும். இதனால் உடலின் அனைத்து   பகுதிகளிலும் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு   உடலானது சுத்தமாக இருக்கும்.

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகள், பிட்சா, பர்கர், வறுத்த உணவுகள், டின் உணவுகள், இனிப்புப் பதார்த்தங்கள், ஹாட்-டாக்ஸ், உப்பு  அதிகம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை கட்டாயமாக தவிர்த்து விடுவது நல்லதாகும்.

4.  தினமும்   வேக வைத்த   காய்கறிகளை உடலுக்கு   எடுத்துக் கொள்வது நல்லதாகும். கேரட்   போன்றவற்றை பச்சையாக உண்பது நல்லதாகும். சாதம்  அதிகமாக உட்கொள்வதை விட, அதில் பாதி அளவு காய்கறிகளை   உடலுக்கு எடுத்துக் கொள்வது நல்லதாகும்.

5.   தினமும்  உணவு உண்பதற்கு   முன்பாக கட்டாயம்   நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.  இது உங்களுக்கு புத்துணர்வை தருவது  மட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும்   தரும்.

6.   தினமும் மூன்று   முறை உண்ணும் போதும்   சரிவிகித உணவை எடுத்துக்  கொள்வது அவசியமாகும். காலை உணவு   கட்டாயமாக எடுத்துக் கொள்வது அவசியமாகும். காரணம்   இது உங்களுக்கு நாள் முழுக்க புத்துணர்ச்சியை அளிக்க  உதவுகிறது. இரவு உறங்கும் முன்பு வயிறு நிறைய உணவு உண்பதை  தவிர்க்கவும். பாதி வயிறு நிரம்பியவாறு உணவு உட்கொள்ளுங்கள். காரணம்   இரவு உடல் ஓய்வாக இருப்பதால், செரிமானம் நடக்க கஷ்டமாக இருக்கும்.

7.  உணவு   உண்ட உடனே   தண்ணீர் குடிப்பதை   தவிர்க்க வேண்டும், சிறிது   நேரம் கழித்து தண்ணீர் அருந்துவது   உங்களுக்கு நன்மையை தரும்.

8. குறிப்பாக   சூப் மற்றும்   பால் போன்ற அதிக  சத்துக்கள் நிறைந்த   உணவுகளை எடுத்துக் கொள்ளவது  உடலுக்கு நன்மையை தரும். எடையை   குறைக்க நீங்கள் டயட் மேற்கொள்ளும்  போது அதில் 20 முதல் 30 சதவீதம் நீர்ம உணவு   பொருட்களாகவும், எஞ்சியவை திட உணவுப் பொருட்களாகவும்   இருத்தல் அவசியமாகும்.

9. முக்கியமாக  பதப்படுத்திய ஜூஸ், குளிர்  பானங்கள் மற்றும் மது போன்றவற்றை   தவிர்த்து விடுவது உங்களுக்கு நன்மையை   தரும். காபி மற்றும் டீ ஆகியவற்றை ஒரு நாளைக்கு   இருமுறைக்கு மேல் அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

10. இரவு   நேரங்களில்   8 மணிக்கு மேல்   உணவு உண்பதை தவிர்த்து   விடுங்கள். அதற்கு மேல் உங்களுக்கு  பசி ஏற்பட்டால் பால் அல்லது பழங்களை   உட்கொள்ளலாம்.

இந்த  10 டிப்ஸை   நீங்கள் பாலோ   செய்தால் போதும்,  உங்கள் உடல் எடை விரைவில்   குறைந்து, உடல் கட்டுக்கோப்புடன்  இருக்கும்.