முருங்கைப்பூ ரசம் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? டேஸ்ட் சும்மா அள்ளும்! ரொம்பவே நல்லதும் கூட…

Author: Dhivagar
30 July 2021, 4:06 pm
how to make neem flower rasam
Quick Share

வேப்ப மரத்தின் வேர் முதல் இலைகள் வரை எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை தான். இதன் இலைகள், விதைகள் மற்றும் பூக்கள் பல ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்க மருத்துவ முறைகளிலும், நம் முன்னோர்கள் பின்பற்றிய, இன்னும் நாம் பின்பற்றி வருகிற பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்று நாம் அவற்றை மருந்தாக மட்டுமே பார்க்கிறோமே தவிர, உணவாக எடுத்துக்கொள்வதில்லை. வேம்பிற்கு புற்றுநோய் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தோல் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும், வயிற்றுப் புழுக்களை அகற்றவும், இரத்த சுத்திகரிப்பானாகவும், தலையில் உள்ள பேன்கள் போன்றவற்றிலிருந்து விடுபடவும் பயன்படுத்தப்படுகிறது.

வெப்ப மரம் பொதுவாக ஏப்ரல் மாதத்தில் பூக்கும். அப்போது கிடைக்கும் வேப்பம்பூவை வைத்து பச்சடி, பொடி, ரசம் போன்ற பல வகையான உணவுகளை தயாரித்து சாப்பிடலாம். இந்த பூக்கள் பொதுவாக சந்தையில் எல்லாம் விற்கப்படுவதில்லை. உங்கள் வீட்டின் அருகில் மரம் இருந்தால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். 

சரி, இன்று நாம் பார்க்கப்போவது வேப்பம்பூவில் வைக்கக்கூடிய ஒரு ரசம். இந்த ரசம் பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு அன்று தயார் செய்யப்படும். வேப்பம் பூவின் சற்று கசப்பான சுவை புளியுடன் நல்ல மணமான ரசத்துக்கு ஏற்றதாக இருக்கும். 

வேப்பம்பூ ரசத்திற்கு தேவையான பொருட்கள்

 • உலர்ந்த வேப்பம் பூக்கள் – 2 தேக்கரண்டி
 • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (1 கப் தண்ணீரில் ஊறவைத்தது)
 • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
 • கொத்தமல்லி (கொத்தமல்லி இலைகள்) – 2 டீஸ்பூன்
 • நெய் – 1 தேக்கரண்டி
 • உப்பு – சுவைக்கு
 • தாளிப்பதற்கு:
 • நெய் / எண்ணெய் – 1 தேக்கரண்டி
 • கடுகு – 1/2 தேக்கரண்டி
 • வர மிளகாய் – 3 அல்லது 4 (2 ஆக கிள்ளியது)
 • பெருங்காயம் – சிறிதளவு
 • துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை – 6-7 இலைகள்

செய்முறை

ஊறவைத்த புளியிலிருந்து சாறு பிழிந்து எடுக்கவும். மற்றொரு 1.5 கப் தண்ணீரில் புளி சாற்றை கலக்கவும். 

ஒரு கடாயில் 1 தேக்கரண்டி நெய்யை சூடாக்கி கடுகு சேர்க்கவும்.

கடுகு பொரியும் வேளையில் துவரம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

முன்பு எடுத்து வைத்த புளி சாற்றை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 

நன்கு சமைய விடுங்கள். 

நன்கு நுரைத்து வரும் வரை வெயிட் செய்யுங்கள். கொதிக்க விட வேண்டாம். 

நன்கு நுரைத்து கொதி நிலை வரும் வேளையில், அடுப்பை குறைத்து சிம்மில் வைத்துவிடுங்கள்.

இப்போது நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து இறக்கிவிடுங்கள். ரசத்தை ஒரு பெரிய தட்டு வைத்து மூடி வைக்கவும்.

ஒரு சிறிய வாணலியில், 1 தேக்கரண்டி நெய்யை சூடாக்கி, வேப்பம் பூக்களை குறைந்த தீயில் வறுக்கவும். பூக்கள் தங்க பழுப்பு மற்றும் மிருதுவாக மாற வேண்டும். தீய்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.

இப்போது இதை சூடான ரசத்தின் மீது சேர்க்கவும். வறுத்த வேப்பம்பூக்கள் ரசத்துடன் நன்றாக கலக்கும் வரை கொஞ்சம் நேரம் காத்திருங்கள். சிறிது நேரம் கழித்து நீங்கள் இந்த வேப்பம் பூ ரசத்தை உங்கள் வீட்டில் இருப்போருக்கு மகிழ்வோடு பரிமாறலாம்.

Views: - 273

0

0