விநாயகர் சதுர்த்திக்கு இனிப்பு பிடி கொழுக்கட்டை செஞ்சு உங்க வீட்டுல இருக்கவங்கள அசத்துங்க

By: Dhivagar
7 September 2021, 5:53 pm
how to make sweet pidi kozhukattai
Quick Share

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான். 

பொதுவாக பெரும்பாலானோருக்கு பிடித்தது இனிப்பு கொழுக்கட்டை தான். இது பிடி கொழுக்கட்டை, வெள்ள கொழுக்கட்டை அல்லது இனிப்பு கொழுக்கட்டை என்றும் அழைக்கப்படுகிறது. 

இது செய்வதற்கு மிகவும் எளிமையானது. நம் வீட்டில் பாட்டி அல்லது அம்மாவின் கைப்பக்குவதில் மாலை சிற்றுண்டியாக சாப்பிட்டிருப்போம். 

விநாயக சதுர்த்தி விழாவின் போது வீட்டில் தயார் செய்து விநாயகருக்கு படைப்பது வழக்கம். 

இதை எப்படி உங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம் என்பதை இந்த பதிவில் கற்றுக்கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1 கப்

வெல்லம் – 1 கப் (அல்லது சுவைக்கு ஏற்ப)

தண்ணீர் -1.5 கப்

ஏலக்காய் பொடி – சிறிதளவு

துருவிய தேங்காய் – 1/4 கப்

பாசிப் பருப்பு – 1/4 கப்

செய்முறை

  • பாசிப் பருப்பை சுமார் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 
  • வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் சூடுபடுத்தவும்.
  • எதற்கும் முன்னெச்சரிக்கையாக 1/2 கப் சூடான நீரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், அரிசி மாவுக்கு ஏற்றாற்போல் தண்ணீர் தேவைப்படலாம்.
  • உருகிய வெல்லத்தில் அரிசி மாவு, ஊறவைத்த பாசிப் பருப்பு, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் சேர்க்கவும். தொடர்ந்து நன்கு கலக்கவும். கட்டி ஏதும் ஏற்படாமல் நன்றாக கலக்கவும். கட்டிகள் எதுவும் இருக்கக்கூடாது. அதற்கு சிறிது தண்ணீர் தேவை என்று நீங்கள் நினைத்தால், ஒரு நேரத்தில் 1 டீஸ்பூன் வெந்நீரைச் சேர்க்கவும்.
  • உருட்டும் பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து விடலாம். குறைந்த தீயில் 5-7 நிமிடங்கள் வரை வேக விடவும்.
  • கைபொறுக்கும் சூட்டில் இருக்கும் பதத்தில், ​​மாவில் இருந்து சிறிய உருண்டைகளை பிடிக்கவும். உங்கள் உள்ளங்கையைப் பயன்படுத்தி, கொழுக்கட்டை பிடித்து அதை விரல்களால் அழுத்தி பிடி கொழுக்கட்டை வடிவத்திற்கு கொண்டு வரவும். இதற்கு முன் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய்யை கையில் தடவிக்கொள்ளுங்கள். கொழுக்கட்டை தயார் செய்யும் போது, ​​மாவு உலர்ந்து போகாமல் இருக்க ஈரமான துணியால் மூடி வைக்கவும்.
  • கொழுக்கட்டைகளை இட்லி குக்கர் அல்லது ஸ்டீமரில் சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். கொழுக்கட்டைகளை வேகவைத்து மிதமான சூட்டில் பரிமாறி மகிழுங்கள்.

Views: - 232

0

0

Leave a Reply