ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை ஒரு பைசா செலவில்லாமல் சரிசெய்ய உதவும் வழிகள்!!!

Author: Hemalatha Ramkumar
2 November 2022, 3:05 pm
Quick Share

வழக்கமான மாதவிடாய் என்பது உங்கள் உடல் சாதாரணமாக வேலை செய்கிறது என்பதற்கான குறிகாட்டியாகும். ஒரு பெண் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதற்கான முக்கிய முன்னறிவிப்பாளராக இருப்பதோடு, ஒரு பெண் கருத்தரிக்கவும் இது மிகவும் அவசியம். இருப்பினும், பெண்கள் தங்கள் வாழ்நாளில் மாதவிடாய் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய். ஒரு பொதுவான மாதவிடாய் சுழற்சியின் நீளம் 28 நாட்கள் ஆகும். இருப்பினும், இது 21 முதல் 38 நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் 35 நாட்களுக்கு மேல் இல்லாவிட்டால் அல்லது உங்கள் கடைசி மாதவிடாயின் 21 நாட்களுக்குள் இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது ஒழுங்கற்றதாகக் கருதப்படுகிறது. பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) அல்லது பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் (பிசிஓடி) என்பது 15 முதல் 30 வயது வரையிலான பெண்களை பாதிக்கும் பொதுவான ஹார்மோன் எண்டோகிரைன் கோளாறுகளில் ஒன்றாகும்.

நம்மில் பெரும்பாலோர் அதிகப்படியான நேரங்களில் உட்கார்ந்தபடியே நேரத்தை செலவிடுகிறோம். நமது அன்றாட வழக்கத்தில் போதுமான உடல் செயல்பாடு இல்லை. இதனை ஈடுகட்ட பெண்கள் பல்வேறு ஆசனங்களைச் செய்வதில் சிறிது நேரம் செலவிடுவது நல்லது. இத்தகைய ஆசனங்கள் உள்-வயிற்று சுருக்கத்தை அதிகரிக்கின்றன மற்றும் வயிற்று மற்றும் இடுப்பு கோளாறுகளை சரி செய்கின்றன.

உங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுவதற்காக, மிகவும் பயனுள்ள சில யோகாசனங்கள்:

1. மலாசனம்

2. அதோ முக சவனாசனம்

3. திரிகோணசனம்

4. சக்ராசனம்

5. பத்தகோணாசனம் அல்லது பட்டாம்பூச்சி போஸ்

சரியான ஹார்மோன் அளவை உறுதி செய்ய உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழக்கமான உடற்பயிற்சி அவசியம் என்றாலும், அதிகப்படியான பயிற்சி தசை தேய்மானம் மற்றும் கிழிவுக்கு வழிவகுக்கும். இது எலும்பு மற்றும் மூட்டு காயம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். எனவே, இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கிறது. எனவே, மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும், மாதவிடாய் காலங்களை நிர்வகிக்கவும் வாரத்திற்கு 2.5 முதல் 5 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது போதுமானது.

Views: - 288

0

0